HomeSportsவிளையாட்டு செய்திகள்TN Finance Minister clarifies that the government do not have any idea...

TN Finance Minister clarifies that the government do not have any idea of Lottery Ticket | தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் விளக்கம்


தமிழ்நாட்டில் (Tamil Nadu) லாட்டரி சீட்டு (Lottery Ticket) மீண்டும் கொண்டு வரப்படும் என்ற  தகவல் வெளியானதை அடுத்து, பல் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. 

தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை எச்சரித்திருந்தார்.

திரு. கருணாநிதி அவர்கள்‌ தமிழ்‌நாட்டின்‌ முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்ததன் காரணமாக, சீட்டாட்டம்‌ , குதிரை ரேஸ்‌ போல‌ லாட்டரி சீட்டு தமிழகத்தில்‌ மாபெரும்‌ சூதாட்டமாக மாறியது. தனியார்‌ லாட்டரி ஏஜெண்ட்டுகள்‌, வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல்‌ அச்சிட்டு மக்களிடம்‌ விற்றார்கள்‌. உடனடியாக கோடீஸ்வரர்கள்‌ ஆகலாம்‌ என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள்‌, லாட்டரி மயக்கத்தில்‌ தங்கள்‌ குடும்பத்தையும்‌, வாழ்வையும்‌ இழந்தார்கள்‌. 

பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக 2001-ல்‌ ஆட்சி அமைத்த பின்‌, லாட்டரி கொள்ளையரின்‌ பிடியில்‌ இருந்து மக்களைக்‌ காக்க, 2003-ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில்‌, ஒரே இரவில்‌ லாட்டரி சீட்டை ஒழித்தார்.  

ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுக லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்தும் என்பது எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கற்பனை. லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் திமுகவிற்கு இல்லை . எடப்பாடி பழனிசாமி புராணங்களைச் சொல்லி முதலமைச்சரின் நற்செயல்களையும் நல்லாட்சியையும் களங்கப்படுத்தக்கூடாது. மனதில் தோன்றிய கட்டுக்கதைகளை உருவாக்கி முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது. அது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் ” தெரிவித்துள்ளார். 

ALSO READ:ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read