Monday, July 26, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Valimai Exclusive Update: The biggest surprise waiting for Ajith fans | Valimai...

Valimai Exclusive Update: The biggest surprise waiting for Ajith fans | Valimai New Update: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது.

ALSO READ | Valimai teaser Update: வலிமை டீசர் தொடர்பாக கசிந்த முக்கிய தகவல்

இதற்கிடையில் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். 

இந்நிலையில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 

அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜித்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதன்படி அஜித் நடிக்க உள்ள 61-வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ | வலிமை படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகிறது; படக்குழு கூறுவது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's