தமிழ் Newsஆரோக்கியம்Varisu First Single Copy of this Tamil Song |...

Varisu First Single Copy of this Tamil Song | மொச்ச கொட்ட பல்லழகி பாட்டு காபியா வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்? டிவிட்டர் ரியாக்ஷனில் நடக்கும் களேபரம்

-

விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வர இருக்கும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியிருக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘ரஞ்சிதமே..ரஞ்சிதமே’ பாடல் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ரியாக்ட் செய்துள்ளனர். விஜய் பாடியிருக்கும் இந்த பாடல் செம குத்து பாடலாக இருப்பதால், பொங்கலன்று தியேட்டர் கிழியப்போகுது என தெரிவித்துள்ளனர். பாடலை ரசித்து ரசித்து இசையமைப்பாளர் தமன் உருவாக்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் விஜய் ரசிகர்கள், சாதாரணமாகவே பாடலுக்கு குத்தாட்டம் போடும் பேன்ஸ், விஜய் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு தியேட்டரை அதிர வைப்பார்கள் என பையர் விட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ரஞ்சிதமே ரஞ்சிதமே – வெளியானது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஆனால், விஜய் ஹேட்டர்ஸ் இல்லாமலா இருப்பார்கள்?. வழக்கம்போல் விஜய் பாடியிருக்கும் இந்த பாடலை கிண்டலடித்தும், கேலி செய்தும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ஒருசிலர் தெரிவிக்க, இன்னும் சிலர் எந்த பாடலின் காபி என்கிற அளவுக்கு டீட்டெய்லாக ரிசேர்ச் செய்துவிட்டனர்.

ரஞ்சிதமே பாடல், ஆல்டைம் ஹிட் லிஸ்டில் இருக்கும் ‘மொச்ச கொட்ட பல்லழகி’ பாடலின் காபி வெர்சன் என தெரிவித்துள்ளனர். அந்த பாடலின் வரிகளையும், ட்யூனையும் லைட்டா அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் ரியாக்ஷனால் டிவிட்டரில் ஒரு களேபரமே நடந்து கொண்டிருக்கிறது. இதனால், டிவிட்டரில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஹேஸ்டேக் இந்தியளவில் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது. பாடல் வெளியான சில மணி துளிகளில் ஒரு மில்லியன் வியூஸ் ஹிட்டடித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கி இருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் விஜய்யின் முதல் படம் என்ற சிறப்பையும் வாரிசு பெற்றிருக்கிறது. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி திரைநட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.  

மேலும் படிக்க | ஹன்சிகாவுக்கு டும் டும் டும்… பிரம்மாண்டாமாக தயாராகும் அரச மாளிகை – எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

This Motorola is a bargain with Snapdragon 778G and 108 MP camera

This half-price Motorola mobile has a spectacular technical sheet, with a large screen, power and a brilliant main...

நியூட்ரான் நட்சத்திரக் கட்டமைப்பைப் பற்றி இயற்பியலாளர்களின் ஆச்சரியமான கண்டுபிடிப்பு

ஒலி வேகம் பற்றிய ஆய்வில் கனமான நியூட்ரான் நட்சத்திரங்கள் கடினமான மேன்டில் மற்றும் மென்மையான மையத்தைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் ஒளி நியூட்ரான்...

“I have a headache if I keep my mouth shut” Allu Arjun who is angry with Rashmika Mandhana..

It seems that Allu Arjun is under pressure from Rashmika Mandhana as some controversial comments that Rashmika has...

துக்ளக் தர்பார் விமர்சனம். துக்ளக் தர்பார் தமிழ் திரைப்பட விமர்சனம், கதை, மதிப்பீடு

துக்லக் தர்பார் - புதுமையான குணாதிசயத்துடன் கூடிய அரசியல் நையாண்டிபல...

this Samsung smart TV is a spectacular purchase

Samsung's TV not only offers an exceptional picture, but also top-notch sound quality and software that performs smoothly....

அல்சைமர் நோய் ஏன் மூளையின் சில பகுதிகளை சேதப்படுத்துகிறது – புதிய மரபணு தடயங்கள்

மனித மூளையின் இந்த வெப்ப வரைபடங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சுப் பகுதிகள் APOE மரபணு மிகவும் செயலில் உள்ள இடத்தைக் காட்டுகிறது (முதல் இரண்டு...

Must read