Homeசினிமா செய்திகள்Vijay:என்னை தேச விரோதியாக கூறுவது தவறு: சொகுசு கார் வழக்கில் ஹைகோர்ட்டில் விஜய் வேதனை -...

Vijay:என்னை தேச விரோதியாக கூறுவது தவறு: சொகுசு கார் வழக்கில் ஹைகோர்ட்டில் விஜய் வேதனை – rolls royce car tax case: vijay says the judge’s comment hurts him


ஹைலைட்ஸ்:

  • நீதிமன்றத்தில் வேதனை தெரிவித்த விஜய்
  • ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிலக்கு வழக்கில் விஜய் மனு

2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார் விஜய். அந்த காருக்கு நுழைவுவரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியோ, நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் ஹீரோக்களாக இரு்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து அல்ல ஏழை மக்களிடம் இருந்து தான் பணம் கிடைக்கிறது என்றார்.

அதன் பிறகு வரி பாக்கியை செலுத்துவதாகவும், ஆனால் தீர்ப்பில் தன்னை பற்றிய விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும், அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் இன்று விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியுள்ளது. குற்றவாளி போல காட்டியுள்ளது.

நிலுவை வரித் தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி செலுத்தினோம்.

வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துகள்.

கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது.

என்னை தேச விரோதியாக கூறுவது தவறு. என் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது என்றார்.

தனி நீதிபதியின் கருத்தை நீக்கக் கோரிய வழக்கை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
நண்பா, நண்பி, அது விஜய்ணா இல்லை: யாரும் ஏமாந்துடாதீங்க



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read