Wednesday, July 28, 2021
Homeசினிமா செய்திகள்Vijay friend actor Srinath tweet goes viral - தமிழ் News

Vijay friend actor Srinath tweet goes viral – தமிழ் News


srinath140721 2

தளபதி விஜய்யுடன் பல திரைப்படங்களில் நடித்தவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான நடிகர் ஸ்ரீநாத், விஜய்யாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு பதிவு செய்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் குறித்து சில விமர்சனங்களும் நீதிபதியால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

srinath140721 3

இதனை அடுத்து விஜய்யை பிடிக்காதவர்கள் விஜய்க்கு எதிரான டுவிட்டுக்களை டுவிட்டரில் பதிவு செய்தனர். விஜய் இறக்குமதி செய்த காருக்கு அவர் வரியே கட்டவில்லை என்பது போல் பலரது பதிவு இருந்தது என்பதும் உண்மையில் அவர் இறக்குமதி செய்த காருக்கு வரி கட்டி விட்டார் என்பதும் நுழைவு வரிக்கு மட்டுமே விலக்கு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

srinath140721 1

இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாகவும் பல நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் இருந்து சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ வரை பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் தனது டுவிட்டரில் ’என் மாப்ளே விஜய்யாக வாழ்வது என்பது அவ்வளவு எளிது அல்ல, ரொம்ப கஷ்டம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Fed Up Of Hypersexualisation Female Athletes Are Finally Taking Matters Into Their Own...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் போட்டிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிகினி உடையை அணியாமல் உடலை மறைக்கும் முழுநீள உடையை அணிந்து விளையாடியதால் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.இதபோன்று...

Today's news

Latest offer's