Vijay Sethupathi release first look poster of Balaji Sakthivel next movie – தமிழ் News

0
19
Vijay Sethupathi release first look poster of Balaji Sakthivel next movie – தமிழ் News


vs030821 3

பரத், சந்தியா நடித்த ’காதல்’ தமன்னா நடித்த ’கல்லூரி’ மற்றும் ’வழக்கு எண் 18/9’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். இவர் நடிகராகவும் ’அசுரன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலாஜி சக்திவேல் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் பாலாஜி சக்திவேல் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்திற்கு ‘நான் நீ நாம்’ என்ற டைட்டில் என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ரியாஸ் இசை அமைக்க, சுரேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, தீபக் என்பவர் படத்தொகுப்பு பணி செய்கிறார்.

e73qngjuuaahhcv

ப்ளூ மூன் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹீரோவாக வீரா என்பவரும் நாயகியாக சாந்தினி தமிழரசனும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here