Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Vishal next movie Veerame Vaagai Soodu to release on January 26 Republic...

Vishal next movie Veerame Vaagai Soodu to release on January 26 Republic Day | ஜனவரி 26 வெளியாகிறது நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்படம்


நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்”. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம்.  

இப்படத்தின் (Tamil Movie) படக்குழுவின் இடைவிடாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பயனாக படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. 

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

ஹைதராபாத்தின் (Hyderabad) பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

vishal1

ALSO READ:விஜய் எழுத்தில் சமுத்திரகனி நடிக்கும் புதிய திரைப்படம்! 

வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. 

இப்படத்தில் விஷால் (Vishal) நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

vishal2

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.ப. சரவணன் பாடத்தை எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு செய்கிறார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்கிறார். 

அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பை கண்ணதாசன் செய்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றுகிறார்.

ALSO READ:அடுத்த 4 மாதங்களில் வெளிவர இருக்கும் டாப் ஹீரோ படங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Shivani Narayanan trail room photo goes viral in internet – தமிழ் News

ஷிவானி நாராயணனை டிரையல் ரூமுக்குள் கேமராமேன் நுழைந்து புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில்...