Home Sports விளையாட்டு செய்திகள் `Well Disciplined'- முதல் பெஞ்ச் மாணவனாக மயங்க் அகர்வால் எப்படிச் சதமடித்தார்?

`Well Disciplined'- முதல் பெஞ்ச் மாணவனாக மயங்க் அகர்வால் எப்படிச் சதமடித்தார்?

0
`Well Disciplined'- முதல் பெஞ்ச் மாணவனாக மயங்க் அகர்வால் எப்படிச் சதமடித்தார்?

[ad_1]

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 221 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இந்திய அணியின் சார்பில் ஓப்பனரான மயங்க் அகர்வால் அட்டகாசமாக ஆடி சதமடித்துள்ளார். கேப்டன் கோலி, புஜாரா ஆகியோர் டக் அவுட் ஆன நிலையில் மயங்க் அகர்வாலின் ஆட்டமே இந்தியாவை காப்பாற்றியிருக்கிறது.

இந்திய அணி இன்று 70 ஓவர்களை ஆடி 221 ரன்களை எடுத்திருந்தது. இதில் மயங்க் அகர்வால் மட்டும் 246 பந்துகளில் அதாவது 41 ஓவர்களை எதிர்கொண்டு 120 ரன்களை எடுத்திருந்தார். கிட்டத்தட்ட 60% ரன்களை மயங்க் அகர்வாலே எடுத்திருந்தார்.

மயங்க் அகர்வால்

என கமெண்ட்ரி பாக்ஸில் கவாஸ்கர் புகழ்ந்திருந்தார்.

‘Disciplined’ இந்த ஒற்றை வார்த்தையில் மயங்கின் ஒட்டுமொத்த இன்னிங்ஸையும் அடக்கிவிடலாம். கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் 13, 17 என ஸ்கோர் செய்து மோசமாகவே ஆடியிருந்தார். இரண்டு இன்னிங்ஸிலும் வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தி மற்றும் மேமிசன் இருவரிடமுமே அவுட் ஆகியிருந்தார்.

இந்தப் போட்டியில் மயங்க் முதலில் ஜாக்கிரதையாக இருந்தது இந்த இருவரிடமும்தான். மயங்க் அகர்வால் அடித்திருக்கும் 120 ரன்களில் வெறும் 25 ரன்களை மட்டுமே டிம் சவுத்தி மற்றும் ஜேமிசனின் ஓவரில் அடித்திருந்தார். பிட்ச்சில் மழை பெய்ததன் தாக்கம் இருந்தாலும் பந்து பெரிதாக ஸ்விங்கே ஆகவில்லை. சவுத்தி வீசிய முதல் ஓவரில் மட்டும் பந்து கொஞ்சம் போக்குக் காட்டியிருந்தது. ஜேமிசனின் முதல் ஓவரில் மட்டும் சுப்மன் கில் 3 பவுண்டரிகளை அடித்திருந்தார். பந்தை ஸ்விங் செய்ய முயன்று ஜேமிசன் நல்ல லெந்த்தில் வீசி அடிபட்டார். ஆனால், ஸ்விங் ஆகாத இந்த நேரத்தில் கூட ஜேமிசனையும் டிம் சவுத்தியையும் மயங்க் அகர்வால் அட்டாக் செய்ய விரும்பவில்லை. டிம் சவுத்தியின் முதல் ஓவரை மெய்டனாக்கியிருந்த மயங்க் அகர்வால், அவர் முதல் ஸ்பெல்லை முடித்துவிட்டு 29வது ஓவரில் இரண்டாவது ஸ்பெல்லை வீச வரும்போதும் முதல் ஓவரை மெய்டனாக்கிவிட்டார். 49வது ஓவரில் ஜேமிசன் ரிட்டர்ன் ஆன போதும் அப்படித்தான் அவரின் முதல் ஓவரையும் மெய்டனாக்கவே செய்தார். என்ன ஆனாலும் இவர்கள் இருவரின் ஓவரிலும் ரிஸ்க் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். முதல் ஓவரில் இருந்து இன்றைய நாளில் வீசப்பட்ட கடைசி ஓவர் வரை இதே மனநிலையோடே ஆடினார். Well Disciplined!

இந்த முதல் நாளில் நியூசிலாந்து அணியின் ஹீரோவாக இருந்தவர் அஜாஸ் படேலே. இந்திய அணி இன்றைக்கு இழந்திருந்த 4 விக்கெட்டுகளையும் இவரே வீழ்த்தியிருந்தார்.

கான்பூர் மைதானத்தில் சராசரியாக 2.6 டிகிரி அளவுக்கு திரும்பிய பந்து, இங்கே மும்பை வான்கடேவில் சராசரி 4.6 என்ற அளவுக்குத் திரும்பியது. பிட்ச்சின் மையப்பகுதியில் விழும் பந்துகள் ரொம்பவே திரும்பின. இதை டார்கெட் செய்து ஸ்டம்ப் லைனில் மட்டுமே அஜாஸ் படேல் வீசிக்கொண்டிருந்தார். மயங்க் அகர்வாலின் இன்னிங்ஸை ‘Disciplined’ எனப் பாராட்டுவதை போல அஜாஸ் படேலின் ஸ்பெல்களையும் பாராட்டலாம். 8வது ஓவரில் முதல் ஸ்பெல்லை அவர் தொடங்கியிருந்தார். இன்றைய நாளின் கடைசி ஓவரையும் அவரே வீசியிருந்தார். எங்கேயுமே அந்த ஸ்டம்ப் லைனை மீறி வெளியே பெரிதாக வீசவே இல்லை. ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து மிடில் & லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி பந்தை அற்புதமாக வெளியே எடுத்தார். கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் கிடைத்தது அஜாஸுக்கு அல்வா தின்றதுபோல் ஆகிவிட்டது. இரண்டே ஓவரில் சுப்மன் கில், புஜாரா, கோலி என இந்தியாவின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், மயங்க் அகர்வால் அட்டாக் செய்தது அஜாஸைத்தான்!

அஜாஸையும் கண்ணை மூடிக்கொண்டு முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்யவில்லை. கில், புஜாரா, கோலி என மூன்று பேரும் அவுட் ஆன பிறகே கவுண்டர் அட்டாக்கைத் தொடுக்க ஆரம்பித்தார்.

அஜாஸ் படேல்

முதல் 100 பந்துகளில் 32 ரன்களை மட்டுமே எடுத்திருந்த மயங்க் அடுத்த 96 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து சதமடித்தார்.

அந்த முதல் 100 பந்துகளின் போது சவுத்தி, ஜேமிசன், அஜாஸ் என வீசிய அத்தனை பேரின் ஓவர்களிலும் ரொம்பவே டிஃபன்ஸிவ்வாகத்தான் ஆடியிருந்தார். அந்தச் சமயத்தில் மயங்க் அட்டாக் செய்வதற்கான தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை. ஏனெனில் சுப்மன் கில் கொஞ்சம் அக்ரஸிவ்வாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், முக்கியமான 3 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு அணியின் ஸ்கோரை முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு மயங்கின் மீது விழுந்தது. அதை சரியாக ஏற்றுக்கொண்டு அணியை முன்நோக்கி அழைத்து சென்றார். அதுவும் ஸ்பின்னர்களை மட்டுமே அட்டாக் செய்து ரொம்பவே Disciplined ஆன முறையில்!

Also Read: IND vs NZ | சதத்தால் நிரூபித்த மயங்க்… சர்ச்சையான முறையில் பறிபோன கோலியின் விக்கெட்!

சராசரியாக 4.6 டிகிரி என்றளவில் பந்து திரும்பினாலும் அஜாஸ் சில சமயங்களில் பயங்கரமாக 9 டிகிரி வரைக்கும் பந்தைத் திருப்பியிருந்தார்.

அஜாஸின் சுழலில் க்ரீஸை விட்டு இறங்கி வந்து லாங் ஆன்/ ஆஃபில் அடித்து ஆடினார். இடதுகை ஸ்பின்னரான அஜாஸ் வலது கை பேட்ஸ்மேனுக்கு பந்தைத் திருப்பி அட்டகாசமாக வெளியில் எடுத்தார். ஆனால், மயங்க் இதையும் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டார்.

மயங்க் அகர்வால்

இன்சைட் அவுட்டாக With the Spin ஆக ஆஃப் சைடில் ஷாட்களை ஆடி கச்சிதமாக பவுண்டரிகளை அடித்தார். மயங்கின் Foot Work-ம் அவரது பொறுமையுமே அவர் சதமடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அஜாஸ் படேல் 29 ஓவர்களில் 73 ரன்களையும் சோமர்வில் 8 ஓவர்களில் 46 ரன்களையும் கொடுத்திருந்தனர். இவற்றில் பெரும்பாலான ரன்களை மயங்க் அகர்வாலே அடித்திருந்தார்.

டெஸ்ட் கரியரில் தனது 4வது சதத்தை மயங்க் அகர்வால் அடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளும் மயங்க் அகர்வாலின் கரியரில் தள்ளாட்டமாகவே இருந்தன. மற்ற வீரர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு அதிகமான வாய்ப்புகள் இவருக்கு வழங்கப்பட்டதில்லை. ரோஹித், ராகுல், ப்ரித்வி ஷா என யார் அணிக்குள் வந்தாலும் முதலில் மயங்க் அகர்வாலின் மீதே கை வைப்பார்கள். அதை தடுக்கும் அளவுக்கு ஒரு சரியான இன்னிங்ஸை மயங்கும் ஆடாமல் இருந்தார்.

Mayank Agarwal

ஆனால், இனி அப்படி மயங்க் அகர்வாலை போகிற போக்கில் அணியிலிருந்து கழட்டிவிட முடியாது. குறைந்தபட்சமாக ஹோம் சீரிஸ்களிலாவது மயங்க் அகர்வாலுக்கான இடத்தை இந்த சதம் பெற்றுக்கொடுக்கலாம்.

சதங்களை இரட்டை சதங்களாக மாற்றுவதில் மயங்க் கில்லாடி. 120 ரன்களில் நாட் அவுட்டாக இருக்கும் மயங்க் இதே ‘Discipline’ உடன் நாளை இரட்டை சதம் அடிப்பாரா? காத்திருப்போம்!

[ad_2]

Source link

sports.vikatan.com

உ.ஸ்ரீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here