Saturday, October 1, 2022

எண்ணம் போல் வாழ்க்கை..!

Where to go for honeymoon Vignesh Sivan, Nayanthara Reaction | ஹனிமூன் எங்க போகப்போறீங்க – வெட்கப்பட்ட நயன்தாரா


தமிழின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. பலரின் தனிப்பட்ட உளவியல் தாக்குதல்களை சந்தித்தாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இவர் தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

மகாபலிபுரத்தில் நடந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக் கான், சூர்யா, கார்த்தி, மணிரத்னம், ஷாலினி, டிடி, சரத்குமார், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமணத்தை முடித்த கையோடு இருவரும் திருப்பதிக்கு சென்று அங்கு நடந்த கல்யாண உற்சவத்தி பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா 20 கோடி ரூபாய் அளவில் பங்களா ஒன்றையும் பரிசளித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தங்களது திருமணத்தை முன்னிட்டு ஜூன் 9ஆம் தேதி மதியம் தமிழகம் முழுவதும் இருக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவையும் ஏற்பாடு செய்தனர்.

Nayanthara

இந்நிலையில் இன்று இருவரும் சென்னையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நயன், உங்களது ஆசீர்வாதம் எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | கல்யாணத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனிற்கு நயன்தாரா அளித்த பரிசு!

அவரைத் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், இதே ஹோட்டலில்தான் முதல்முதலாக நயன்தாராவை கதை சொல்வதற்காக சந்தித்தேன். தற்போது மீண்டும் தம்பதியாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது ஆதரவும், ஆசீர்வாதமும் தொடர்ந்து எங்களுக்கு வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | திருப்பதி கோவில் சர்ச்சை! மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம்!

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ஹனிமூன் எங்க சார் போகப்போறீங்க என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷும், நயனும் சேர்ந்து வெட்கப்பட்டு அங்கிருந்து நகர்ந்தனர். 

மேலும் படிக்க | லோகேஷ் – சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘இரும்பு கை மாயாவி’ – தயாரிப்பாளர் உறுதி!

முன்னதாக, படங்களில் தொடர்ச்சியாக கமிட்டாகியிருப்பதால் ஹனிமூன் தொடர்பாக நயன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Today's Feeds

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch | ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவே இல்லை – விக்ரம் சோகம்

Actor Vikram Speaks About Aishwarya Rai in ponniyin Selvan Audio Launch...

0
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில்...

Want to submit Guest Post ?

Submit your guest / Sponsored Post on below form 👇🏻👇🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Continue reading