[Why do i walk on chair? Thirumavalavan explains | ’இரும்புச்சேர் மீது நடந்து சென்றது ஏன்?’ திருமாவளவன் கொடுத்த விளக்கம்]


சென்னையில் கொட்டித் தீர்த்த மழையில், வேளச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் குடியிருப்பிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. அவர் டெல்லி கிளம்புவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், மழைநீர் இருந்ததால் தொண்டர்கள் உதவியுடன் இரும்பு சேர் மீது நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக உருவெடுத்தது. மழைநீரில் கால் நனையாமல் இருப்பதற்காக, திருமாவளவன் தன் தொண்டர்களை நடத்தும் விதத்தை பாருங்கள் என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சி இணையவாசிகள் விமர்சனத்தை முன்வைத்தனர்.

ALSO READ | திருமாவளவனுக்கு ஆதரவாக டிவிட்டரில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்

இந்நிலையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள திருமாவளவன், தொண்டர்களை ஒருபோதும் மரியாதை குறைவாக நடத்தும் எண்ணம் தனக்கில்லை எனக் கூறியுள்ளார். என்னுடைய கால்கள் சேறு, சகதியை பார்க்காததில்லை என தெரிவித்துள்ளார். டெல்லி கிளம்புவதற்காக புறப்பட்டபோது ஷூ, ஷாக்ஸ் அணிந்திருந்ததாகவும், அது மழை நீரில் நனைந்துவிட்டால், 3 மணி நேரம் விமானத்தில் அப்படியே பயணிக்க முடியாது என்பதற்காக தொண்டர்கள் உதவியுடன் இரும்புச்சேர் மீது நடந்து காரில் ஏறிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ | முல்லைப் பெரியாறு அணை 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது: துரைமுருகன்

தங்கயிருந்த குடியிருப்பில் தேங்கியிருந்த மழைநீரில் சாக்கடையும் கலந்திருந்ததாக தெரிவித்துள்ள திருமாவளவன், அதில் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனால், இது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இணையத்தில் அவருக்கு எழுந்த விமர்சனங்களுக்கு, விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

zeenews.india.com

Zee News Tamil

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read