Monday, November 29, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்Will Vikram act in Rajamoulis next film?

Will Vikram act in Rajamoulis next film?


பாகுபலியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ‘RRR’.  இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் , சமுத்திரக்கனி  ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி  உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ அரசியில் கட்சி தலைவர்களை சீண்டியதா மாநாடு திரைப்படம்?

பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார்.  இந்த  போஸ்டர்கள், டீசர்கள் மற்றும் முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் நாளை (நவம்பர்26) ரிலீசாகிறது. இந்த படம் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது.  இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.  அதனை தொடர்ந்து இப்படம் 2022 ஜனவரி 7ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

rrr

மேலும் இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக இயக்குனர் ராஜமௌலி  தெலுங்கு முன்னணி நடிகர் மஹேஷ்பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.  ஆனால் இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.  இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விக்ரமிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பும் வர வாய்ப்புள்ளது.  தற்போது விக்ரம் கோப்ரா படப்பிடிப்பில் உள்ளார்.

cobra

ALSO READ இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 10 படங்களின் பட்டியல் இதோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds