Home தமிழ் News ஆரோக்கியம் Zee Tamil Channel: Punit Goenka to continue as the Chairman of ZEEL-Sony Merger | ZEEL-Sony Merger: ஜீ தமிழ் சேனலுடன் இணையும் சோனி நிறுவனம்; தலைவராக தொடர்வார் புனித் கோயங்கா

Zee Tamil Channel: Punit Goenka to continue as the Chairman of ZEEL-Sony Merger | ZEEL-Sony Merger: ஜீ தமிழ் சேனலுடன் இணையும் சோனி நிறுவனம்; தலைவராக தொடர்வார் புனித் கோயங்கா

0
Zee Tamil Channel: Punit Goenka to continue as the Chairman of ZEEL-Sony Merger | ZEEL-Sony Merger: ஜீ தமிழ் சேனலுடன் இணையும் சோனி நிறுவனம்; தலைவராக தொடர்வார் புனித் கோயங்கா

[ad_1]

ZEEL-Sony Merger:  ஜீ மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா (ZEEL-Sony Merger) இணைப்புக்கு பிறகு, நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக புனித் கோயங்கா தொடரலாம் என ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் (ZEEL) இயக்குநர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்திய மீடியா துறையில் மிகப் பெரிய நாள் இன்று. மீடியா துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்களான இரு குழுமங்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளன.

ஜீ தமிழ் உள்ளிட்ட 10 பிராந்திய மொழிகளில் தொலைகாட்சி சேனல்களை ZEEL நிறுவனம் இயக்குகிறது. 10 மொழிகளில், 100 க்கும் மேற்பட்ட சேனல்களுடன் 190 நாடுகளை சென்றடையும் ஜீல், பார்வையாளர்களிடையே 19 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

தொலைகாட்சியில் மட்டும் 2.6 லட்சம் மணிநேரங்களுக்கு மேலான உள்ளடகத்தைக் கொண்டுள்ளது என்பது சிறப்பு. இது தவிர, டிஜிட்டல் தளத்தில் Zee5 மூலம் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. இவற்றைத் தவிர, நாட்டில் 25 சதவீத படங்கள் ZEE Network-ல் பார்க்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Also Read | ZEEL-Sony Merger: இணையும் இரு மீடியா ஜாம்பவான்கள், முக்கிய அம்சங்கள் இதோ

“இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனித் கோயங்கா தொடர்ந்து நீடிப்பது உத்தேச இணைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்” என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இறுதியில் உயர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் மற்றும் தலைமைத்துவத்தை வழங்குபவர்களால் நடத்தப்படுகிறது மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக புனித் கோயங்கா அதைச் செய்தார் என்று ஜீ பிசினஸ் நிர்வாக ஆசிரியர் அனில் சிங்வி கூறினார். இதில் அவரது பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் சோனி அங்கீகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  

சோனி போன்ற ஒரு சர்வதேச ஊடக நிறுவனம், புனிட் கோயங்கா மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தில் சோனிக்கு பெரும்பான்மை பங்குகள் இருக்கும்.

Read Also | பெண் போட்டியாளருடன் நேரம் செலவழிக்க Break கேட்கும் அமிதாப்பச்சன்

புனித் கோயங்கா தனது இந்திய வணிகத்தை நடத்த வேண்டும் என்று சோனி முடிவு செய்துள்ளது என்பது ஜீ என்டர்டெயின்மென்ட்டின் உயர் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கைக்கான அங்கீகாரமாக இருக்கிறது.  

ஒரு காலத்தில் போட்டியாளராக இருந்த நிறுவனம் ஒன்று, தற்போது ஜீ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து, அதன் நிர்வாகத்தின் மேல் இந்த அளவு நம்பிக்கை வைப்பது தொழில்துறையில் அரிய நிகழ்வு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.  

மேலும், ZEE Entertainment Enterprises (ZEEL) இன் விளம்பரதாரர்களுக்கும் Sony Pictures Network India (SPNI) இன் விளம்பரதாரர்களுக்கும் இடையே சில ஏற்பாடுகள் ஒப்புக் கொள்ளப்படும். கால அட்டவணையின் படி, விளம்பரதாரர் குடும்பம், சாதாரண வணிகப் போக்கில், தற்போதுள்ள ~ 4 லிருந்து 20 சதவிகிதமாக அதன் பங்குகளை அதிகரித்துக் கொள்ளலாம். இணைக்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பெரும்பாலானவை சோனி குழுமத்தால் பரிந்துரைக்கப்படும்” என்று இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read Also | ஒன்று சேரும் Zee எண்டர்டெயின்மெண்ட்-சோனி பிக்சர்ஸ், முழு தகவல் இங்கே

SPNI இன் தாய் நிறுவனமான சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் 1.575 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ளது. தற்போது வளர்ச்சிக்கான பிற வாய்ப்புகளையும் மேற்கொண்டுள்ளது. ஜீல் மற்றும் எஸ்பிஎன்ஐ ஆகியவற்றின் தற்போதைய மதிப்பிடப்பட்ட ஈக்விட்டி மதிப்புகளின் அடிப்படையில், இணைக்கும் விகிதம் ஜீலுக்கு ஆதரவாக 61.25% ஆக இருந்திருக்கும்.

இந்த இணைப்பு தெற்காசியா முழுவதும் முன்னணி மீடியா & என்டர்டெயின்மென்ட் நிறுவனமாக உயர் வளர்ச்சி மற்றும் லாபத்தை அடைவதற்கான ஜீலின் மூலோபாயத்திற்கு ஏற்ப உள்ளது.  

(பொறுப்புத் துறப்பு: நிறுவனங்களின் பெயர்கள் ஒரேபோல் இருந்தாலும், Zeel எங்கள் துணை நிறுவனம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எங்களது மேலாண்மை பொறுப்பு ஜீ மீடியா கார்ப்பரேஷனிடம் உள்ளது.)

Also Read | ராணா, வெங்கடேஷ் இணையும் வெப் சீரிஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here