Home தமிழ் News ஆட்டோமொபைல் அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே… இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே… இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

0
அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே… இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

[ad_1]

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

என்னதான் விலையுயர்ந்த சொகுசு கார்கள் வீட்டில் இருந்தாலும் ஒரு சிலர் ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அதில் பயணிப்பதை அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். ரயலில் பயணிப்பது அலாதியான இன்பத்தை வழங்கும். குறிப்பாக, குடும்பத்துடன் கூட்டமாக பயணிக்கும்போது ஒருவருடன் ஒருவர் உரையாடிக் கொண்டு அதிக சந்தோஷத்துடன் பயணத்தை மேற்கொள்ளவும் ரயில் பயணம் பெருமளவில் உதவுகின்றது. இத்தகைய இந்தியன் ரயில்வேஸைப் பற்றிய சுவாரஷ்யமான 20 தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

169 ஆண்டுகள் பழைமையானது

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதே இந்தியன் ரயில்வே. முதன் முதலில் 1853ம் ஆண்டு 16 ஏப்ரல் மாதமே இந்தியன் ரயில்வே முதல் முறையாக தொடங்கப்பட்டது. முதல் ரயில் தடம் மும்பையின் போரி பந்தர் – தானே வழித் தடத்தை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டது. இந்த வழி தடம் சுமார் 34 கிலோமீட்டர் இடைவெளிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 30 பெட்டிகள் அடங்கிய அந்த ரயிலை மூன்று எஞ்ஜின்களைக் கொண்டு அப்போது இயக்கினர். சாஹிப், சுல்தான் மற்றும் சிந்த் ஆகிய லோக்கோமோட்டீவ்களைக் கொண்டே அது இயக்கப்பட்டது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

இந்தியன் ரயில்வேக்கு சின்னம் உள்ளதா?

ஆம், இந்தியன் ரயில்வேவிற்கு சின்னம் உள்ளது. இந்தியன் ரயில்வேயின் 150 ஆம் ஆண்டு விழா 2002ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போதே இதற்கான சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனால் அந்த சின்னம் உருவாக்கப்பட்டது. யானை ஒன்று பச்சை நிற சமிக்ஞை லைட்டை கையில் ஏந்தி இருப்பதைப் போன்றிருக்க கூடிய சின்னத்தையே அது ரயில்வேவிற்காக உருவாக்கியது. யானைகள் கலைப்படையாமல் இயங்கும் திறன் கொண்டவை. இதனை பிரதிபலிக்கும் வகையிலேயே ரயில்வேவிற்கான இந்த சின்னம் உருவாக்கப்பட்டது. 2003லேயே இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

ரயில்வேவிற்கான முதல் பணிமனை எங்கே நிறுவப்பட்டது?

பிரிட்டிஷ் அரசாங்கத்தின்போதே இந்தியன் ரயில்வேவிற்கான முதல் ரயில் பணிமனை உருவாக்கப்பட்டது. பீகார் மாநிலம், முங்கர் அருகே உள்ள ஜமால்பூரிலியே அது நிறுவப்பட்டது. 1862 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரே பணிமனை நிறுவப்பட்டது. பின்னாளில் இது மிக பெரிய இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டாக மாறியது. தற்போது, இரும்பு மற்றும் உலோகங்கள் சார்ந்த பொருட்கள் பல தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

உலகின் நான்காம் மிகப் பெரிய ரயில் நெட்வொர்க் கொண்டது

இந்தியன் ரயில்வே சுமார் 68 ஆயிரம் கிமீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. இதனால், உலகின் நான்காவது பெரிய வழித் தடத்தைக் கொண்ட ரயில்வேவாக இந்தியன் ரயில்வே பார்க்கப்படுகின்றது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. 68 ஆயிரம் கிமீ ரயில் வழி தடத்தில் சுமார் 45 ஆயிரம் கிமீ ரயில் வழித்தடம் மின்சார மயமாக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மாநில அரசுகளின் பங்கில்லாமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே இது இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

ரயில்வேவில் 4 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களுக்கு சொந்தமானது

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு உலக பாரம்பரிய மிக்க தளங்களை இந்தியன் ரயில்வே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. அவை, டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே (1999), சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை (2004), நீலகிரி மலை ரயில்பாதை தமிழ்நாடு (2005) மற்றும் கல்கா ஷிம்லா ரயில்பாதை (2008) ஆகும். இந்த பட்டியலில் இன்னும் சிலவும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

ரயில் மியூசியங்கள்

ரயில்வே சில மியூசியங்களை நடத்தி வருகின்றது. அதில், அதன் வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றது. குறிப்பாக, ரயில்வே தயாரித்து அரிய உபகரணங்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் கலை பொருட்கள் உள்ளிட்டவற்றை மியூசியம் வாயிலாக அது காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒட்டுமொத்தமாக 34 மியூசியங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 3 தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மியூசியமே ரயில்வேவின் முதல் காட்சியகம் ஆகும். இதுவே இந்திய அரசின் தேசிய மியூசியமும்கூட.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

உலகின் மிக நீளமான ரயில் பிளாட்பாரம்

உலகின் மிக நீளமான ரயில் நடைபாதை இந்தியாவிலேயே உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ரயில் நிலையமே உலகின் மிக நீளமான ரயில் நடைபாதையைக் கொண்டுள்ளது. தற்போது இதையே மிஞ்சும் வகையில் மிக நீளமான பிளாட்பாரம் கர்நாடகாவின் ஹூப்ளியில் அமைக்கப்பட்டு வருகின்றது. சுமார் 1,505 மீட்டர் நீளத்திற்கு அது கட்டப்பட்டு வருகின்றது. கோரக்பூர் பிளாட்பாரமின் நீளம் 1,366 மீட்டர் ஆகும்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

லக்சூரி ரயில்கள் பன்பாட்டில் உள்ளதா?

இந்த மாதிரி ஒரு சந்தேகம் உங்களுக்கு வந்தே இருக்கக் கூடாது. ஏனெனில் பல சொகுசு ரயில்கள் இந்தியன் ரயில்வே உள்ளது. மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் 5 ராயல் டிரைன்கள் பயன்பாட்டில் உள்ளன. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், தி கோல்டன் சாரியட், தி மஹாராஜாஸ் எக்ஸிபிரஸ் மற்றும் டெக்ன் ஒடிசி ஆகியவையே அவை ஆகும். இந்த ரயில்கள் அனைத்தும் அரண்மனையில் இருப்பதைப் போன்ற உணர்வை பயணிகளுக்கு வழங்கும்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

மிக குறுகிய மற்றும் நீளமான ரயில் பாதை:

இந்தியாவில் மிக நீளமான ரயில் பாதையாக தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கி திப்ருகர்ஹ் ரயில் பாதை இருக்கின்றது. விவேக் எக்ஸ்பிரஸ் எனும் ரயிலேயே இந்த வழித்தடத்தை இணைக்கின்றது. 4,189 கிலோமீட்டர் நீளம், 56 நிறுத்தங்களை கொண்டதே இந்த ரயில்பாதை வழித்தடம். இந்த தடத்தின் பயண நேரம் 82 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் ஆகும். மிக குறுகிய ரயில்பாதையாக நாக்பூர்-அஜ்னி இருக்கின்றது. வெறும் 3 மணி நேரமே இதன் ஒட்டுமொத்த பயண நேரம் ஆகும்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

ஒரு பகுதியில் இரண்டு வெவ்வேறு நிலையங்கள்

மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரிலேயே ஸ்ரீராம்பூர் மற்றும் பெலாபூர் எனும் ரயில் நிலையங்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், இவை எதிரெதிர் திசையில் அமைந்திருக்கும்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

அதிக ரூட்களுக்கு ரயில்களை இயக்கும் ரயில் நிலையம்

மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் இறுந்து பன்முக முனையங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது ஓர் ஆன்மீக மார்க்கம் ஆகும். எனவேதான் இந்த பகுதியை இணைக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில் சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் பேருந்துகளை இயக்குவதுபோல் மதுரா சந்திப்பிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

லாபம் ஒரு ரூபாய் எனில் 93 பைசா ரயில்வே இயக்கத்திற்காகவே செலவழிக்கப்படுகின்றது.

ஆமாங்க, ரயில்வேவின் ஒட்டுமொத்த வருவாயில் 94 சதவீதம் அதன் இயக்கத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு என அனைத்திற்கும் மிக தாரளமாக அதன் வருவாய் செலவிடப்படுகின்றது. இருப்பினும், பெரியளவில் இதில் லாபம் கிடைக்காதது மத்திய அரசுக்கு சற்றே கவலைதான்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

Image Courtesy: Nriyer64/Wiki Commons

டைமண்ட் கிராசிங்:

நாக்பூரிலேயே டைமண்ட் கிராசிங் அமைந்துள்ளது. இதில் ஒன்று வடக்கு – தெற்கை இணைக்கும். மற்றொன்று, கிழக்கு – மேற்கு இணைக்கும். இத்தகைய ஓர் ரயில் பாதையை நாட்டின் வெறு எந்த பகுதியிலும் பார்க்க முடியாது. இந்த வழி தடத்தில் ஊழியர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறு பிழையும் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

உலகின் உயரமான ரயில் பிரிட்ஜ்

செனாப் ஆற்றைக் கடக்கும் வகையில் கடக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. உலோகம் மற்றும் கான்கிரீட்டால் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆற்றில் இருந்து 1178 அடி உயரத்தில் உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பக்கல் மற்றும் கவுரி பகுதியை இணைக்கும் வழித்தடத்திலேயே உலகின் உயரமான ரயில் மேம்பாலம் அமைந்துள்ளது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

வேலையளிப்பதில் நாட்டிலேயே மிகப்பெரிய துறை ரயில்வேதுறை

நாட்டிலேயே அதிக பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறையாக ரயில்வே துறை இருக்கின்றது. சுமார் 1.4 மில்லியன் பணியாளர்கள் ரயில்வேவில் பணியாற்றுகின்றனர். நேரடியாக மட்டுமின்றி இன்னும் பல லட்சம் மக்கள் மறைமுகமாகவும் இத்துறை சார்ந்து பணியாற்றுகின்றனர். மக்கள் பயணம் மட்டுமின்றி, கூட்ஸ் மற்றும் பிற சேவைகளையும் ரயில்வே மேற்கொண்டு வருகின்றது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

இந்தியாவின் மிக நீளமான ரயில் டனல் எங்கு உள்ளது?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் சுரங்கப்பாதைகள் உள்ளன. ஆனால், அனைத்தைக் காட்டிலும் மிக நீளமானதாக பிர் பிரஞ்ஜல் சுரங்க வழிப்பாதை உள்ளது. இது ஹிமாலயாவின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை 11.25 மீட்டர் நீளமுடையது ஆகும்.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

மிகவும் பிஸியான ரயில்நிலையம்:

நம்மில் பலர் நம்ம சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மிகவும் பிசியானதுனு நினைச்சிட்டிருப்போம். ஆனால், அதுதான் கிடையாது. சென்ட்ரல் ரயில் நிலையத்தைவிட மிகவும் பிசியான ரயில் நிலையும் ஒன்று நாட்டில் உள்ளது. அது ஹவுரா ரயில் நிலையம் ஆகும். 23 பிளாட்பாரங்கள் இந்த ரயில் நிலையத்தில் உள்ளது. நாள்தோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்த ரயில் தடத்தைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் மிகவும் பழைமையான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

திருடர்களிடம் இருந்து மின்சாதன பொருட்களை காப்பாற்ற ரயில்வே கையாளும் தந்திரம்

திருடர்களிடம் இருந்து தங்களுடைய மின்சாதனங்களை காப்பாற்ற இந்தியன் ரயில்வே கையாளும் தந்திரமான யுக்திகளில் இதுவும் ஒன்று. ஆம், ரயில்வே பயன்படுத்தும் பல்புகள் மற்றும் மின்விசிறிகள் போன்ற மின்சாதனங்கள் 110 வோல்ட்டிற்கு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நம் வீட்டில் உள்ள மின்சாதனங்கள் 220 வோல்டில் இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 110 வோல்டை 220 வோல்டாக மாற்றுவது கடினமாக இருப்பதாலும் இத்தகைய செயல்பாட்டை அது கையாள்கின்றது.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

நிம்மதியா தூங்க உதவும் சஸ்பென்ஷன்கள்:

ரயிலில் பயணிக்கும்போது பெரியளவில் நமக்கு அதிர்வுகள் தெரிவதில்லை. இதற்கு ரயில்வேதுறை அதன் வீல்களில் பயன்படுத்தும் சிறப்பு வசதிக் கொண்ட சஸ்பென்ஷனே காரணம். 1.2 Hz அல்லது 72 bpm வசதிக் கொண்ட சஸ்பென்ஷனையே ரயில்வே ரயில்களில் பயன்படுத்துகின்றது. இதுவே, பயணங்களின்போது தடையில்லா தூக்கத்தைப் பெற வழி வகுக்கின்றன.

அட எத்தன முறை டிராவல் பண்ணியிருக்கோம் ஆனா இது தெரியாம போச்சே... இந்திய ரயில்வே பற்றிய 20 அமேஸிங்கான தகவல்கள்!

மிக பழைமையான ரயில் எஞ்ஜின் ஏதாச்சும் பயன்பாட்டில் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கும். இந்தியன் ரயில்வே தற்போதும் பழைமையான எஞ்ஜினை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது. டெல்லி – ஆல்வார் பகுதியை இணைக்கும் வழி தடத்தில் அது பயன்படுத்தப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவரும் பொருட்டு அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1885 முதல் 1909 வரை அது கடின உழைப்பில் ஈடுபட்டு வந்தது. இதன் பின்னரே அதை பணி ஓய்வு வழங்கப்பட்டது. இதற்கு பின்னர் 1997 இல் ஃபேரி குயின் என்ற பெயரில் மீண்டும் சுற்றுலா பயன்பாட்டிற்காக அது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் உச்சபட்ச வேகமாக மணிக்கு 40 கிமீ ஆகும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here