Home Sports விளையாட்டு செய்திகள் “அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்குக் கிடைத்த தங்கம்” – ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் |Former Indian bowler Harbhajan Singh supports Arshdeep Singh

“அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்குக் கிடைத்த தங்கம்” – ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் |Former Indian bowler Harbhajan Singh supports Arshdeep Singh

0
“அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்குக் கிடைத்த தங்கம்” – ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் |Former Indian bowler Harbhajan Singh supports Arshdeep Singh

[ad_1]

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான போட்டி நேற்றிரவு துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்ய, பேட்டிங் ஆடிய இந்திய அணி அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 60 (44) ரன்களை எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்குக் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆர்ஸ்தீப் சிங் தவறவிட்டார். இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஆர்ஸ்தீப் சிங் கேட்ச்சைத் தவறவிட்டதுதான் காரணம் என்று பலரும் அவரை சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து விமர்சித்துவந்தனர். இந்நிலையில் ஹர்பஜன் சிங், அபினவ் முகுந்த், இர்பான் பதான் ஆகியோர் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.

”இளம் வீரரான அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்குக் கிடைத்த தங்கம்” என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களான அபினவ் முகுந்த், இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

[ad_2]

Source link

sports.vikatan.com

நந்தினி.ரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here