Home சினிமா செய்திகள் ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான் | Shah Rukh Khan’s Red Chillies Entertainment to make Alia Bhatt’s Darlings in Tamil and Telugu

ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான் | Shah Rukh Khan’s Red Chillies Entertainment to make Alia Bhatt’s Darlings in Tamil and Telugu

0
ஆலியா பட் நடிப்பில் சர்ச்சையை கிளப்பிய ‘டார்லிங்ஸ்’ திரைப்படம்: தமிழில் ரீமேக் செய்யும் ஷாருக்கான் | Shah Rukh Khan’s Red Chillies Entertainment to make Alia Bhatt’s Darlings in Tamil and Telugu

சர்ச்சையை ஏற்படுத்திய ஆலியா பட்

சர்ச்சையை ஏற்படுத்திய ஆலியா பட்

பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவருக்கும் ரன்பீர் கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த வாரம் 5ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான ‘டார்லிங்ஸ்’ படத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். இந்தப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கணவரை கொடூரமாக தாக்கும் ஆலியா பட்

கணவரை கொடூரமாக தாக்கும் ஆலியா பட்

‘டார்லிங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே, ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், படமும் வெளியாகி இன்னும் சர்ச்சையாகிப் போனது. ‘டார்லிங்ஸ்’ படத்தில் ஆலியா பட் தனது கணவரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஆண்கள் அமைப்புகள் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், ஆலியா பட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் டார்லிங்ஸ்

தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் டார்லிங்ஸ்

இந்தியில் உருவான ‘டார்லிங்ஸ்’ படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்தியிலேயே பயங்கரமான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் சந்தித்த இந்தப் படத்தை, இப்போது தமிழ், தெலுங்கிலும் தயாரிக்க ஷாருக்கான் முடிவு செய்துள்ளாராம். அதனை அபிசியலாகவும் அறிவித்து தமிழ் ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளார்.

தமிழுக்கு ஏற்ப கதையில் மாற்றம்

தமிழுக்கு ஏற்ப கதையில் மாற்றம்

மேலும், ஷாருக்கான் தரப்பில் இருந்து இதுகுறித்து மேலும் சில அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திப் படத்தை இயக்கிய ஜஸ்மீத் கே ரீன் தான், தமிழிலும் தெலுங்கிலும் டார்லிங்ஸ் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில். ஷெபாலி ஷா, விஜய் வர்மா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாகவும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் உருவாகும் எனவும், ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்த அப்டே தமிழ் ரசிகர்களையும் சூடாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here