Home தமிழ் News ஆட்டோமொபைல் இது மாருதி 800 கார் என்று சொன்னால்… நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்…

இது மாருதி 800 கார் என்று சொன்னால்… நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்…

0
இது மாருதி 800 கார் என்று சொன்னால்… நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்…

[ad_1]

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

இந்தியாவில் மலிவான விலை கொண்ட கார்களுக்கே நல்ல வரவேற்பு இருக்கும் என்பது தற்போதுவரையில் எழுதப்படாத விதியாக உள்ளது. இதனை நன்கு புரிந்துக்கொண்டு செயல்பட்டுவரும் மாருதி சுஸுகியில் இருந்து கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார் ஆல்டோ ஆகும்.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடிய விலையில் உள்ளதால், இப்போதும் இந்தியாவின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றாக மாருதி சுஸுகி ஆல்டோ உள்ளது. அதேநேரம், பாகங்கள் எளிதாக கிடைப்பதால் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலும் ஆல்டோவிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. செகண்ட் ஹேண்டில் காரை வாங்கும் பலர் அதனை தங்களுக்கு ஏற்ப மாடிஃபை செய்து கொண்டுள்ளதை இதற்குமுன் பார்த்துள்ளோம்.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

இந்த வகையில் மாருதி ஆல்டோ கார் ஒன்று 2-கதவுகளுடன் கூபே-ஸ்டைல் மான்ஸ்டர் காராக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதன்படி காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விஹாஸ் சௌதிரி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அவற்றை விவரிக்கும் வீடியோ இதோ…

இந்த மாடிஃபை ஆல்டோ காரின் முன்பக்கத்தில் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட குழியில் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலே எல்இடி டிஆர்எல் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. தடிமனான வெட்டுக்களுடன் தட்டையானதாக பொனெட் பகுதி உள்ளது. மான்ஸ்டர் பெயருக்கேற்ப முன்பக்க க்ரில் அமைப்பு நன்கு பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

அத்துடன் தடிமனான முன்பக்க பம்பரும் காருக்கு பருத்த உருவத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. பக்கவாட்டில் முக்கிய ஹைலைட்டாக, பெரிய அளவில் சக்கர வளைவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக காரின் அகலம் நன்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப ஆஃப்-ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தின் டிராக் அளவு விரிவடைந்துள்ளது.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மாடிஃபை காரை பார்ப்போரை முதலாவதாக கவரும் அம்சம் என்னவென்றால், பெரிய அளவிலான 2-கதவு அமைப்புதான். விலைமிக்க ஸ்போர்ட்ஸ் கார்களில் உள்ளதை போன்று கத்திரிக்கோல் வடிவிலான கதவு அமைப்பாக இது வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புறம் முழுவதும் கருப்பு-நீலம் என்ற ட்யுல்-டோன் பெயிண்ட்டில் உள்ளது.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

இதனுடன் காரை சுற்றிலும் போதுமான அளவு க்ரோம் தொடுதல்கள் உள்ளதால் பிரீமியம் உணர்வு காண்போர்க்கு ஏற்படுகிறது. எரிபொருள் நிரப்பும் பகுதி பக்கவாட்டில் இருந்து பின்பக்க பம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது. காரின் வெளிப்பக்கத்தில் மற்ற சிறப்பம்சங்களாக, சாய்வான கூபே-ஸ்டைலில் மேற்கூரை, பின்பக்க மேற்கூரையில் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான ஸ்பாய்லர் மற்றும் நேர்த்தியாக வட்ட வடிவில் டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

உட்புற கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்காங்கே சிவப்பு நிற தொடுதல்கள் உள்ளன. டேஸ்போர்டின் மத்தியில் பெரிய அளவில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும், பந்தய கள கார்களினால் கவரப்பட்டது போன்றதான வடிவில் ஸ்டேரிங் சக்கரமும் மற்றும் உட்புற மேற்கூரை, இருக்கைகள் & தரை பாய்களுக்கு டைமண்ட்-கட் உள்ளமைவும் இந்த ஆல்டோ காரில் வழங்கப்பட்டுள்ளன.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

இவை தவிர்த்து காரின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. மாருதி ஆல்டோ 800 காரில் 0.8-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 69 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இது மாருதி 800 கார் என்று சொன்னால்... நம்ப முடிகிறதா? வெறும் 2 கதவுகளுடன் மான்ஸ்டரான தோற்றத்தில்...

தற்சமயம் மாருதி ஆல்டோ 800 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.25 லட்சத்தில் இருந்து ரூ.4.95 லட்சம் வரையில் உள்ளன. விற்பனையில், ஆல்டோ 800-க்கு மாருதி செலிரியோ, ஹூண்டாய் சாண்ட்ரோ, டட்சன் ரெடி-கோ, ரெனால்ட் க்விட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here