Home Sports விளையாட்டு செய்திகள் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது FIFA – காரணம் என்ன? | FIFA Suspends All India Football Federation – What is the reason?

இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது FIFA – காரணம் என்ன? | FIFA Suspends All India Football Federation – What is the reason?

0
இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை ரத்து செய்தது FIFA – காரணம் என்ன? | FIFA Suspends All India Football Federation – What is the reason?

[ad_1]

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி தற்போது முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் FIFA அறிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய FIFA முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு

இதனிடையே அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரஃபுல் படேல் (Praful Patel) மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்வாகிகள் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்தியக் கால்பந்து நிர்வாகக் குழுவின் நிர்வாகக் குழுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரஃபுல் படேலை இடைநீக்கம் செய்வதற்கான முடிவையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA எடுத்துள்ளது.

[ad_2]

Source link

sports.vikatan.com

நந்தினி.ரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here