Home Sports விளையாட்டு செய்திகள் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை | Mithali Raj surpasses Edwards to become highest run-getter in women’s cricket across formats

இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை | Mithali Raj surpasses Edwards to become highest run-getter in women’s cricket across formats

0

[ad_1]


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டின் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசிஒருநாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கிரிக்கெட்டின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் சேர்த்து உலக சாதனை வைத்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்க மிதாலி ராஜுக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 24-வது ஓவரில் மிதாலி ாாஜ் பவுண்டரி அடித்து எட்வார்ட்ஸ் சாதனையை முறியடித்தார்.

பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ உலக மகளிர் கிரிக்கெட்டில், 3 விதமானப் போட்டிகளிலும் அதிகமான ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார். இங்கிலாந்துவீராங்கனை சார்லோட்டி எட்வார்ட்ஸ் சாதனையை மிதாலி முறியடித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் பெருமையைகடந்த மார்ச் மாதம் மிதாலி எட்டினார். 38 வயதான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை எனும் பெருமையை தக்கவைத்துள்ளார்.

அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 10ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, உலகளவில் 2-வது வீராங்கனை மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here