Home தமிழ் News ஆட்டோமொபைல் இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்… 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்… 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

0
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்… 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 10,287 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 14,214 ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும். இந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த பெருமையை தன்வசப்படுத்திய முதல் ‘மேட் இன் இந்தியா’ கார் இதுதான்.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இதுவே இந்த காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ஹூண்டாய் நிறுவனம் 13,000 க்ரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 12,625 ஆக சரிந்துள்ளது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

ஹூண்டாய் நிறுவனம் தற்போது செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னையை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக கார்கள் உற்பத்தியில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. ஹூண்டாய் க்ரெட்டா காரின் வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் களமிறக்கவுள்ளது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

அதன் பிறகு இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரின் விற்பனை கிடுகிடுவென உயரலாம். இதற்கிடையே இந்த பட்டியலில், ஹூண்டாய் வெனியூ 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுவும், டாடா நெக்ஸான் காரை போல், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்தான். ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 8,185 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 12,000 ஆக உயர்ந்துள்ளது. இது 47 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் வெனியூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 2022 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதுவே ஹூண்டாய் வெனியூ காரின் இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் 4வது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் 11,007 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த மைக்ரோ-எஸ்யூவி அல்லது சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் கடந்த 2021ம் ஆண்டு 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

எனவே இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது. இதற்கிடையே இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 12,676 பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்திருந்தது.

இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 9,709 ஆக குறைந்துள்ளது. இது 23 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் பிரெஸ்ஸா காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய 2022 மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இருப்பினும் இந்த காரின் விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பதற்கு, செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை பிரச்னை காரணமாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here