Home தமிழ் News ஆட்டோமொபைல் இனி போட்டி அனல் பறக்க போகுது… டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இனி போட்டி அனல் பறக்க போகுது… டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

0
இனி போட்டி அனல் பறக்க போகுது… டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது. இதற்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனமும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு வருகிறது. இதில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400) எலெக்ட்ரிக் காரும் ஒன்றாகும்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon EV) காருக்கு இது போட்டியாக இருக்கும்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஐசி இன்ஜின் காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஆகும். மஹிந்திரா நிறுவனம் தற்போது எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் மஹிந்திரா எக்ஸ்யூவி400. முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், எக்ஸ்யூவி300 இவி (XUV300 EV) என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் கார் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் (XUV400 Electric) என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிக்கு வைத்திருந்தது. அதன் டிசைனிற்கும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கும், டிசைனில் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் ‘ஷார்ப்’ ஆன ஹெட்லேம்ப்கள் வழங்கப்படலாம்.

இனி போட்டி அனல் பறக்க போகுது... டாடாவின் எலெக்ட்ரிக் காருக்கு சவால் அளிக்க வருகிறது மஹிந்திரா தயாரிப்பு!

அதேபோல் முக்கோண வடிவிலான பனி விளக்குகள் அறை, புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவையும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரை காட்டிலும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் நீளமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here