Home சினிமா செய்திகள் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அஜித்தின் ஏகே 61? | AK 61 Ajith starrer is based on a real life story

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அஜித்தின் ஏகே 61? | AK 61 Ajith starrer is based on a real life story

0
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அஜித்தின் ஏகே 61? | AK 61 Ajith starrer is based on a real life story

அஜின் நடிக்கும் ‘ஏகே61’ திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் கைகோத்திருக்கும் படம் ‘ஏகே61’. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படம் இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அஜித் நடிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துள்ள புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here