Home Sports விளையாட்டு செய்திகள் உலகளவில் 3-வது: கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஆன்டர்ஸன் | James Anderson leapfrogs Kumble to become 3rd highest wicket-taker in Test

உலகளவில் 3-வது: கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஆன்டர்ஸன் | James Anderson leapfrogs Kumble to become 3rd highest wicket-taker in Test

0
உலகளவில் 3-வது: கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஆன்டர்ஸன் | James Anderson leapfrogs Kumble to become 3rd highest wicket-taker in Test

[ad_1]


உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அனில் கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து, ஆன்டர்ஸன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. 3-வதுநாள் ஆட்டமானந ேநற்று இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, கும்ப்ளேயின் சாதனையை முறியடித்து ஆன்டர்ஸன் சாதனை படைத்தார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆன்டர்ஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 163 போட்டிகளில் விளையாடி 621 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த நிலையில் அவரின் இடத்தை தற்போது ஆன்டரஸன் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் இலங்கை அணியின் லிஜென்ட் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திேரலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

ஆன்டர்ஸன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 16,507 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் 30 முறை 5 விக்கெட்டுகளையும் 3 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்தின் சாதனையை எப்போது தகர்த்துவிட்டார் ஆன்டர்ஸன்.

ஆன்டர்ஸன் தனது சாதனையை முறியடித்ததற்கு அனில் கும்ப்ளே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்வி்ட்டரில் கும்ப்ளே பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துகள் ஆன்டர்ஸன், வேகப்பந்துவீச்சாளர் என்னுடைய சாதனையைக் கடந்து மைல்கல்லை அடைந்ததைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ 18 ஆண்டு பசி, உயர்ந்த அளவில் சிறப்பாகச் செயல்பட்டவை எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் இது சிறந்த முயற்சிதான் அதிலும் வேகப்பந்துவீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு.

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்துக்கு முன்னேறியதற்கு வாழ்த்துகள் ஆன்டர்ஸன்” எனத் தெரிவித்துள்ளார்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here