Home Sports விளையாட்டு செய்திகள் உலக கேடட் செஸ் போட்டி: இந்திய சிறுமிகள் சாம்பியன் | World Cadet Chess Tournament: Indian Girls Champion

உலக கேடட் செஸ் போட்டி: இந்திய சிறுமிகள் சாம்பியன் | World Cadet Chess Tournament: Indian Girls Champion

0
உலக கேடட் செஸ் போட்டி: இந்திய சிறுமிகள் சாம்பியன் | World Cadet Chess Tournament: Indian Girls Champion

பதுமி: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய சிறுமிகளான ஷுபி குப்தா, ஏ.ஷார்வி ஆகியோர் பட்டம் வென்றனர்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப் ஜார்ஜியா நாட்டில் உள்ள பதுமி நகரில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான 12 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் காஸியாபாத் நகரைச் சேர்ந்த ஷுபி குப்தா 11 சுற்றுகளில் 8.5 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

8 வயதுக்குட் பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஏ.ஷார்வி 11 சுற்றுகளின் முடிவில் 9.5 புள்ளிகள் சேர்த்து சாம்பியன் பட்டம் வென்றார். இங்கிலாந்தை சேர்ந்த போதனாவும் 9.5 புள்ளிகளை பெற்றிருந்தார். எனினும் டைபிரேக் புள்ளிகளை ஷார்வி சிறப்பாக வைத்திருந்ததால் வெற்றியாளரானார்.

8 வயதுக்கு உட்படோருக்கான சிறுவர்கள் பிரிவில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஃபின் சஃபருல்லாகான் 9 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். 9.5 புள்ளிகளுடன் பிரான்ஸின் மார்க் லரி தங்கப் பதக்கம் வென்றார். இதே புள்ளிகளை குவித்த ரஷ்யாவின் சவ் ஷோக்ட்ஜீவ் ரோமன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். – பிடிஐ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here