Home சினிமா செய்திகள் “எனக்கும் என் கணவருக்கும் சினிமாவுல அதிர்ஷ்டம் இல்ல!” – `பாண்டவர் பூமி’ ஷமிதா ஆதங்கம்| actress shamitha shares about television re-entry and cinema career

“எனக்கும் என் கணவருக்கும் சினிமாவுல அதிர்ஷ்டம் இல்ல!” – `பாண்டவர் பூமி’ ஷமிதா ஆதங்கம்| actress shamitha shares about television re-entry and cinema career

0
“எனக்கும் என் கணவருக்கும் சினிமாவுல அதிர்ஷ்டம் இல்ல!” – `பாண்டவர் பூமி’ ஷமிதா ஆதங்கம்| actress shamitha shares about television re-entry and cinema career

[ad_1]

“நான் சின்னத்திரைக்கு நடிக்க வந்தபோதும், அதுக்கு முன்னாடியும், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் நடிகர்களைத் தேர்வு செய்வாங்க. கதையின் போக்கு எப்படி இருந்தாலும், நடிகர்களோட நடிப்புக்கான ஸ்கோப்ல பெரிசா சிக்கல் வராது. ஆனா, இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு? பெரும்பாலான சீரியல்கள்ல ஹீரோ – ஹீரோயினுக்கு இடையேயான ரொமான்ஸுக்குத்தான் இப்போ அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுது. நடிப்புக்கான ஸ்கோப் ரொம்பவே கம்மியாதான் இருக்கு. இந்தப் போக்கை எங்களாலயெல்லாம் மாத்திட முடியாது. அதனால, நம்ம கொள்கையில சில தளர்வுகளை ஏற்படுத்திகிட்டு, வர்ற வாய்ப்புகள்ல நல்ல வாய்ப்பைத் தேடிக்கிறது மட்டும்தான் எங்க கையில இருக்கு. அதைத்தான் இப்போ நானும் பண்ணியிருக்கேன்.

ஷமிதா - ஶ்ரீகுமார்

ஷமிதா – ஶ்ரீகுமார்

நிறைய சீரியல்கள்ல நடிச்சிருந்தாலும், இப்பவரை `பாண்டவர் பூமி’ படம்தான் எனக்கு முதல் அடையாளமா இருக்கு. அதுல நடிச்சிருந்த ரஞ்சித் சாரை, ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒருமுறை வெளியிடத்துல பார்த்துப் பேசினேன். `ஆட்டோகிராப்’ படத்தோட ப்ரிவியூ ஷோவுல என்னைக் கூப்பிட்டிருந்தார் சேரன் சார். அதுக்கப்புறம் அவரையும், அந்தப் படத்தின் டீம்ல வேற யாரையும் இதுவரை நான் சந்திக்கல. கல்யாணமானதுமே என் அக்கா ராஜேஸ்வரி அமெரிக்காவுல செட்டிலாகிட்டாங்க. வருஷத்துக்கு ஒருமுறை சென்னை வந்துட்டுப் போவாங்க. சினிமாவிலிருந்து முழுமையா விலகிட்டு, குடும்ப வாழ்க்கையில மட்டும் கவனம் செலுத்துறாங்க. கோவிட் சிக்கலால ரெண்டு வருஷமா அவங்க இந்தியா வரல. ஆனா, போன்ல அடிக்கடி பேசிப்போம். என் உலகம் இப்போதைக்கு இவ்வளவுதான்…” என்று கலகல சிரிப்புடன் முடித்தார் ஷமிதா.

[ad_2]

Source link

cinema.vikatan.com

கு.ஆனந்தராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here