Home சினிமா செய்திகள் கங்கனா விமர்சித்த 67வது பிலிம்பேர் விருது – திரண்டுவந்த பாலிவுட்; விருது விழாவின் ஹைலைட்ஸ்! | 67th Filmfare Awards: Actor Ranveer Singh, Actress Kriti Sanon Win Best Actor, Actress Award

கங்கனா விமர்சித்த 67வது பிலிம்பேர் விருது – திரண்டுவந்த பாலிவுட்; விருது விழாவின் ஹைலைட்ஸ்! | 67th Filmfare Awards: Actor Ranveer Singh, Actress Kriti Sanon Win Best Actor, Actress Award

0
கங்கனா விமர்சித்த 67வது பிலிம்பேர் விருது – திரண்டுவந்த பாலிவுட்; விருது விழாவின் ஹைலைட்ஸ்! | 67th Filmfare Awards: Actor Ranveer Singh, Actress Kriti Sanon Win Best Actor, Actress Award

[ad_1]

சர்தாம் உதம்

சர்தாம் உதம்

விழாவில் ’83’ படத்தில் கபில்தேவாக நடித்த ரன்வீர் சிங்கிற்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் வந்து விருதைப் பெற்றுக்கொண்டார். இது தவிர கிருத்தி சனோன் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். ‘மிமி’ என்ற படத்தில் வெளிநாட்டுத் தம்பதிக்கு வாடகைத் தாயாக நடித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

திரைப்பட விமர்சகர்கள் (Critics) சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர் விருது ‘சர்தார் உதம்’ படத்துக்காக விக்கி கௌஷலுக்கும், ‘ஷெர்னி’ படத்துக்காக வித்யா பாலனுக்கும் வழங்கப்பட்டது. ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்குச் சிறந்த இயக்குநர் விருது, அதே ‘ஷெர்ஷா’ படத்துக்குச் சிறந்த படத்துக்கான விருது ஆகியனவும் வழங்கப்பட்டன. ‘சர்தார் உதம்’ படத்துக்குச் சிறந்த படம் என்ற விமர்சகர்களின் விருதும் வழங்கப்பட்டது. நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு ‘மிமி’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகர் விருதும் கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகர் விருது எஹான் பட்டுக்கு ’99 சாங்கஸ்’ படத்துக்காகவும், சிறந்த அறிமுக நடிகை விருது ஷர்வாரி வாக்குக்கு ‘பன்டி அவுர் பப்லி 2’ படத்துக்காகவும் கிடைத்தது.

'ஷெர்ஷா' படத்திலிருந்து...

‘ஷெர்ஷா’ படத்திலிருந்து…

சிறந்த அறிமுக இயக்குநர் விருது ‘ராம்பிரசாத் கி தெஹ்ராவி’ படத்துக்காக சீமா பஹ்வாவிற்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது சுபாஷ் கய்க்கு வழங்கப்பட்டது. விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here