Home Sports விளையாட்டு செய்திகள் “கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள். அழகு பற்றிய கவலை வேண்டாம்!”- டென்னிஸ் வீராங்கனை செரீனா | Serena Williams talks about the beauty of Black

“கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள். அழகு பற்றிய கவலை வேண்டாம்!”- டென்னிஸ் வீராங்கனை செரீனா | Serena Williams talks about the beauty of Black

0
“கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள். அழகு பற்றிய கவலை வேண்டாம்!”- டென்னிஸ் வீராங்கனை செரீனா | Serena Williams talks about the beauty of Black

[ad_1]

அமெரிக்காவைச் சேர்ந்த 40 வயதான டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கம் மற்றும் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அந்த விளையாட்டில் உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர். தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் செரீனா, இந்தத் தொடருக்கு பின்னர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டு 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “கறுப்பினப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும். கறுப்பாக இருப்பதை எண்ணி வருத்தப்படாதீர்கள். மாறாக, அதை எண்ணி பெருமைப்படுங்கள்” என்று பேசியுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்

இது பற்றி விரிவாகப் பேசிய செரீனா, “தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறையபேர் தங்கள் தோல் கருமையாக இருப்பதால் அவர்கள் அழகாக இல்லை என்று நினைக்கிறார்கள். ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். கறுப்பாக இருப்பதை எண்ணி பெருமைப்படுங்கள்’. உங்களின் அழகை இந்த உலகம் தீர்மானிக்கக் கூடாது, தீர்மானிக்கவும் விடாதீர்கள்” என்று கூறினார்.

[ad_2]

Source link

sports.vikatan.com

மு.பூபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here