Home தமிழ் News ஆட்டோமொபைல் காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

0
காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

[ad_1]

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

அதேநேரம் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கூடுதலாக வழங்கப்படும் வசதிகள் உரிமையாளர்களின் மூலம் அவ்வப்போது நமக்கு தெரியவந்துவிடுகின்றன. எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார்களை ஏற்கனவே டெலிவிரி பெற்று பயன்படுத்தி வருபவர்களின் மூலம் கிடைக்கும் இந்த அப்டேட்கள் பெரும்பாலும் வாகனத்தின் நிஜ உலக மைலேஜை வெளிக்காட்டக்கூடியவைகளாகவே உள்ளன.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரின் நிஜ உலக மைலேஜாக 10 கிமீ-இல் இருந்து 14கிமீ வரையில் அவற்றின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது காரை பற்றிய காரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முனிஷ் சர்மா என்ற உரிமையாளர், தனது எக்ஸ்யூவி700 காரின் தொடுத்திரையில் இணைப்பு செயலி அமைப்பில் விளம்பரம் தொடர்பான தேர்வு ஒன்றினை புதியதாக கண்டறிந்துள்ளார்.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

செயல்படுத்துதல், செயல்பாட்டை நீக்குதல் என்கிற தேர்வுடன் இந்த பகுதி உள்ளது. இதனை செயல்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை பற்றிய தெளிவான விளக்கம் இல்லை. இந்த அப்டேட்டின்படி பார்க்கும்போது மஹிந்திரா அதன் புதிய மற்றும் எதிர்கால தயாரிப்புகளில் விளம்பரங்கள் அல்லது பாப்-அப்ஸ் உடன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பினை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப விளம்பரங்களை காணுவதற்கும், அல்லது நிராகரிப்பதற்கும் இந்த தேர்வினை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த விளம்பரங்கள் வாகனத்தின் உத்தரவாதம் அல்லது சாலையோர உதவிகளை பயனர்களுக்கு தெரிவிக்கும் விதமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி, மியுசிக் ஸ்ட்ரீமிங், போக்குவரத்து அப்டேட்கள் போன்ற சேவைகளையும் புதியதாக இந்த எக்ஸ்யூவியில் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

இந்த புதிய சேவைகள் இலவசமாகவோ அல்லது கூடுதல் தொகையினை செலுத்தியோ பெறக்கூடியவைகளாக இருக்கும் என தெரிகிறது. இவை தேவை இல்லை என நினைப்பவர்கள் இந்த செட்டிங்ஸ் தேர்வில் விளம்பரங்களை ரத்து செய்து கொள்ளலாம். இவை எல்லாம் ஒரு யூகமாகவே கூறியுள்ளோமே தவிர்த்து, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரையில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியாகவில்லை.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700-க்கு இதுவரையில் மட்டுமே 70 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பாகங்கள் கிடைப்பதை பொறுத்து, வருகிற 2022 ஜனவரி பாதிக்குள் 14 ஆயிரம் எக்ஸ்யூவி700 கார்களை டெலிவிரிக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் எக்ஸ்யூவி700 கார்களின் டெலிவிரிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் துவங்கின.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

டீசல் எக்ஸ்யூவி700 கார்களின் டெலிவிரிகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதலாவதாக எக்ஸ்யூவி700 காரை முன்பதிவு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது காரை டெலிவிரி பெறும் அதிகாரப்பூர்வ தேதியை பெற்றுவிட்டனர். எக்ஸ்யூவி700 எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மஹிந்திரா துவங்கியது.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

முதல் நாளில் புக்கிங் செய்தவர்களில் சிலருக்கு டெலிவிரி தேதி 2022 நவம்பர் என அப்போதே அப்டேட் கிடைக்க பெற்றுவிட்டது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திராவின் இந்த எஸ்யூவி வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், எக்ஸ்யூவி700-இன் 2 லிட்டர் ஜிடிஐ எம்ஸ்டாலியோன் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 எச்பி வரையிலான ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் 380 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியது. 2.2 லி டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 182 எச்பி மற்றும் 450 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது. இதனுடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன. அத்துடன், அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வுகளும் எக்ஸ்யூவி700-இன் சில வேரியண்ட்களில் கொடுக்கப்படுகின்றன.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் எக்ஸ்யூவி700 முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. அதுவே இந்த மஹிந்திரா காருக்கு குழந்தை பயணிகள் பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்.எக்ஸ், ஏஎக்ஸ்3, ஏஎக்ஸ்5 மற்றும் ஏஎக்ஸ்7 என்கிற நான்கு விதமான ட்ரிம் நிலைகளில் கிடைக்கும் எக்ஸ்யூவி700-இன் டாப் வேரியண்ட்களில் மட்டும் 7-இருக்கை தேர்வு கொடுக்கப்படுகிறது.

காரிலும் விளம்பரங்களா!! மஹிந்திரா எக்ஸ்யூவி700-இல் கொண்டுவரப்படும் புதிய சேவைகள்!

எக்ஸ்யூவி700 காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம ரூ.12.49 லட்சத்தில் இருந்து ரூ.22.99 லட்சம் வரையில் உள்ளன. விற்பனையில் இந்த மஹிந்திரா எஸ்யூவி காருக்கு ஜீப் காம்பஸ், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஹூண்டாய் அல்கஸார், டாடா சஃபாரி உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here