Home தமிழ் News ஆட்டோமொபைல் கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்… கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்… கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

0
கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்… கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

[ad_1]

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

பிரபல பிரீமியம் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கவாஸாகி நிறுவனம், அதன் நிஞ்ஜா 400 (Kawasaki Ninja 400) பைக்கை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மறு வருகை இந்திய இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியிருக்கின்றது. புதிய பிஎஸ்6 உமிழ் விதி அமலுக்குக் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் இந்த வாகனம் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

இதன் வெளியேற்றம் சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய பிஎஸ்6 தர விதிக்கு உட்பட்ட வாகனமாக நிஞ்ஜா 400 மீண்டும் இந்திய சந்தையை வந்தடைந்திருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர இருசக்கர வாகனம் என்பதால் அதன் விலை சற்று அதிகமானதாக உள்ளது. ரூ. 4.99 லட்சம் என்ற விலையிலேயே புதிய கவாஸாகி நிஞ்ஜா 400 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது வரிகள் சேர்க்கப்படாத எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎஸ்6 கவாஸாகி நிஞ்ஜா 400 அதன் போட்டி பைக் மாடல்களைக் காட்டிலும் சற்று அதிக விலைக் கொண்டதாக உள்ளது. குறிப்பாக, மிக முக்கியமான போட்டியாளராக விளங்கும் கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) மாடலைக் காட்டிலும் ரூ. 1.85 லட்சத்திற்கும் அதிகமான விலை புதிய நிஞ்ஜா விற்பனைக்கு வந்திருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கேடிஎம் ஆர்சி390 பைக் ரூ. 3.14 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

அதேவேலையில், கேடிஎம் ஆர்சி390 பைக்கைக் காட்டிலும் கவாஸாகி நிஞ்ஜா 400 பவுர்ஃபுல் மோட்டார்சைக்கிளாகக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் 399 சிசி பேரல்லல் ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 45 எச்பி பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால், கேடிஎம் ஆர்சி பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 373 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டார் 43.5 எச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும். இது மிக லேசான பவர் வித்தியாசம் கொண்டிருப்பதை நமக்கு தெரியப்படுத்துகின்றது. இதுமட்டுமின்றி, கணிசமான கூடுதல் தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட மோட்டார்சைக்கிளாகவும் கவாஸாகி நிஞ்சா 400 காட்சியளிக்கின்றது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

நிஞ்ஜா 400 பைக்கில் நடுத்தர-டிஜிட்டல் எல்சி இன்ஸ்ட்ரூமென்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனலாக் டேக்கோமீட்டர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, எல்இடி ஹெட்லைட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், டேஷில் ஈகோ இன்டிகேட்டர் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களும் பைக்கில் இடம் பெற்றிருக்கும்.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், இதன் போட்டி இருசக்கர வாகனமான கேடிஎம் ஆர்சி பைக்கில் ஃபேன்சியான டிஎஃப்டி டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது. நிஞ்ஜா 400 பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

கவாஸாகி நிறுவனம் இந்த பைக்கை சிபியூ வாயிலாகவே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்து அதனை இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் விளைவாகவே இப்பைக்கின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. இது கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு மட்டுமின்றி டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கும் போட்டி என்பது குறிப்பிடத்தகுந்தது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாளன் தயார்... கவாஸாகி நிஞ்ஜா 400 பிஎஸ்6 இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்!

பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரு வீல்களும் 17 அங்குலம் கொண்டவை. இந்த பெரியளவு வீல்களால் பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 140 மி.மீட்டராக காட்சியளிக்கின்றது. மேலும், பைக்கில் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக பெடல் டிஸ்க்குடன் கூடிய 310 மிமீ ட்யூவல் பிஸ்டன் காலிபர்கள் முன்பக்க வீலிலும், பின்பக்க வீலில் 220 மிமீ அளவிலான டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பமும் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் பாதுகாப்பான பிரேக்கிங்வை வழங்கும்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here