Home Sports விளையாட்டு செய்திகள் கேமரூன் கிரீன் சரவெடி ஆட்டம்: உறைந்து நின்ற விராட் கோலி – தெறிக்கும் மீம்ஸ்!

கேமரூன் கிரீன் சரவெடி ஆட்டம்: உறைந்து நின்ற விராட் கோலி – தெறிக்கும் மீம்ஸ்!

0
கேமரூன் கிரீன் சரவெடி ஆட்டம்: உறைந்து நின்ற விராட் கோலி – தெறிக்கும் மீம்ஸ்!

ஆஸ்திரேலிய ஓபனிங் பேட்ஸ்மேன்களின் சரவெடி ஆட்டத்தை பார்த்து விராட் கோலி உறைந்து நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

நேற்றிரவு நடந்த இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக, இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், கே.எல்.ராகுல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களும் குவித்தனர். இப்போட்டியில் பேட்டிங்கில் குறை சொல்லமுடியாத அளவுக்கு 208 ரன்களை குவித்த இந்திய அணி பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பியது.

209 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் கேமரூன் க்ரீன் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே லாங் ஆஃபில் சிக்ஸர் விளாசினார் ஃபின்ச். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் புதிதாக ஓப்பனிங் இறங்கியிருந்த கேமரூன் க்ரீன் தொடர்ந்து 4 பவுண்டரிகளை ஓடவிட்டார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஃபின்ச் 3 பவுண்டரிகளைச் சிதறவிட்டார்.

image

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் இந்த சரவெடி ஆட்டத்தை பார்த்து விராட் கோலி உறைந்து நின்று விட்டார். கேமராக்கள் விராட் கோலியின் ரியாக்ஷனை படம்பிடித்தபோது அவர் சிலை போல் உறைந்து நின்றது ஸ்கீரினில் தெரிந்தது. அவரின் இந்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் இதனை தனது ட்விட்டர் பதிவில் சிரிக்கும் எமோஜிகளுடன் பகிர்ந்துள்ளார். விராட் கோலியின் இந்த ரியாக்ஷன் மீம்ஸ்களாகவும் மாறி வைரலாகி விட்டது.

இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் 61 ரன்கள் (30 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இந்த தோல்வி மூலம் சொந்த மண்ணில் தொடரின் கோப்பையை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இந்திய அணி  தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20: வெற்றிபெற்றது ஆஸ்திரேலிய அணி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here