Home சினிமா செய்திகள் கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்…இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? | Vikram beats Baahubali 2 collection record…But defeat to break this record

கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்…இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? | Vikram beats Baahubali 2 collection record…But defeat to break this record

0
கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்…இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே? | Vikram beats Baahubali 2 collection record…But defeat to break this record

முதல் முறையாக பிரேக்

முதல் முறையாக பிரேக்

ரஜினி, வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிப்பதை பல வருடங்களாக வழக்கமாக கொண்டுள்ளார். கமலும் அப்படி தான். ஒரு படத்தின் வேலைகளை முழுவதும் முடித்த பிறகே அடுத்த படத்தின் அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் தற்போது தான் முதல் முறையாக கமல் தனது 60 வருட திரைப்பயணத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்துள்ளார்.

வசூல் சாதனை படைத்த விக்ரம்

வசூல் சாதனை படைத்த விக்ரம்

ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடித்து, வெளி வந்தாலும் கமலின் விக்ரம் படம் பல வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளது. ரிலீசான 15 நாட்களில் உலகம் முழுவதும் 350 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருகிறது. மொத்தம் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட விக்ரம் இந்தியாவில் மட்டும் 240 கோடி வசூலை தொட்டுள்ளது.

அத்தனையும் ஓரங்கட்டிடுச்சே

அத்தனையும் ஓரங்கட்டிடுச்சே

இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் வலிமை, பீஸ்ட், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, டான் ஆகிய படங்கள் தான் டாப் இடங்களில் இருந்தன. ஆனால் இந்த மாஸ் ஹீரோக்களின் வசூல் சாதனையை இரண்டே நாட்களில் ஓரங்கட்டி விட்டது கமலின் விக்ரம் படம்.

பாகுபலி 2 சாதனையும் முறியடிப்பு

பாகுபலி 2 சாதனையும் முறியடிப்பு

தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூல் செய்த படமாக பாகுபலி 2 தான் இருந்தது. பாகுபலி 2 படம் தமிழகத்தில் 155 கோடிகளை வசூல் செய்திருந்தது. தமிழகத்தில் ரிலீசான 15 நாட்களில் 150 கோடி வசூலை எட்டிய முதல் படம் பாகுபலி 2 தான். ஆனால் விக்ரம் படம் இந்த சாதனையை முறியடித்து, 15 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 175 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இத்தனை செய்தும் 2வது இடம் தானா

இத்தனை செய்தும் 2வது இடம் தானா

இத்தனை கோடிகளை வசூல் செய்தும் விக்ரம் படத்தால் அதிகம் வசூல் செய்த கோலிவுட் படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை. 350 கோடிகளை வசூல் செய்தும் விக்ரம் இரண்டாவது இடத்தில் தான் உள்ளது. இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் விக்ரம் 30வது இடத்தை தான் பிடித்துள்ளது.

வசூலில் முதலிடம் யாருக்கு

வசூலில் முதலிடம் யாருக்கு

விக்ரம் வசூலை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி தகவலாகவே உள்ளது. இதை விட ஷாக்கான தகவல் என்னவென்றால் அதிகம் வசூலித்த கோலிவுட் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ரஜினியின் 2.0 தான். கோலிவுட்டில் டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் ரஜினியை முதலிடத்திலும், கமலை இரண்டாவது இடத்திலும் தான் வைத்துள்ளார்கள்.

என்னங்க சொல்றீங்க...இது உண்மையா

என்னங்க சொல்றீங்க…இது உண்மையா

கோலிவுட்டில் அதிகம் வசூலித்த டாப் 3 படங்களின் பட்டியலில் 655 – 800 கோடிகளை வசூல் செய்து 2.0 முதலிடத்தில் உள்ளது. 350 கோடிகளை வசூல் செய்த விக்ரம் 2வது இடத்தில் உள்ளது. ரஜினியின் கபாலி படம் 300 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிகம் வசூலித்த இந்திய படங்களின் பட்டியலில் 2.0, 8 வது இடத்திலும், விக்ரம் 30வது இடத்திலும், கபாலி 45வது இடத்திலும் தான் உள்ளன.

இவங்கள விட்டா ஆளே இல்லையா

இவங்கள விட்டா ஆளே இல்லையா

என்ன செய்தாலும், எத்தனை நடிகர்கள் வந்தாலும் ரஜினி என்ற ஒற்றை நடிகரின் மாஸ் மற்றும் வசூல் சாதனையை அடிச்சுக்கவே முடியாது என ரசிகர்கள் கொண்டாடுவது உண்மை தானோ என பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள். இவர் தான் தமிழ் சினிமாவின் உண்மையான வசூல் மன்னன் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும், படமே நடிக்கவில்லை என்றாலும் ரஜினி, கமலை விட்டால் வசூல் சாதனை படைக்க யாராலும் முடியாது என்ற நிலை தான் தற்போதும் தொடர்கிறது என்பதையே இந்த பட்டியல் காட்டுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here