Home சினிமா செய்திகள் கோலிவுட் ஸ்பைடர்: நண்பர்களுக்காக விஜய் எடுத்த முடிவு; பிரமாண்டத்துக்கு தயாராகும் ‘வாடிவாசல்!’| Kollywood Spyder: From vijay’s new decision to ponniyin selvan movie’s edit work

கோலிவுட் ஸ்பைடர்: நண்பர்களுக்காக விஜய் எடுத்த முடிவு; பிரமாண்டத்துக்கு தயாராகும் ‘வாடிவாசல்!’| Kollywood Spyder: From vijay’s new decision to ponniyin selvan movie’s edit work

0
கோலிவுட் ஸ்பைடர்: நண்பர்களுக்காக விஜய் எடுத்த முடிவு; பிரமாண்டத்துக்கு தயாராகும் ‘வாடிவாசல்!’| Kollywood Spyder: From vijay’s new decision to ponniyin selvan movie’s edit work

[ad_1]

* தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள படம் ‘வாடிவாசல்’. சமீபத்தில் ஈசிஆரில் இரண்டு நாட்கள் அதன் டெஸ்ட் ஷூட் நடந்தது. ஜல்லிக்கட்டுக் காளைகள் திமிறிக்கொண்டு வர, அதை மாடுபிடி வீர்களுடன் சேர்ந்து சூர்யா அடக்கும் காட்சிகள் டெஸ்ட் ஷூட் செய்யப்பட்டன. அந்த காட்சிகள் எடுத்த வரையிலும் திருப்தி என்கிறார்கள். ஆகையால், தென்மாவட்ட கதைக்கள ஏரியாவை, சென்னையிலேயே செட் போட்டு படமாக்கத் திட்டமிட்டு வருகின்றனராம். இன்னொரு விசேஷம், போனி கபூரோடு சேர்ந்து ‘வலிமை’யை தயாரித்த ஜீ ஸ்டூடியோஸ் தாணுவோடு சேர்ந்து தயாரிக்கிறதாம். எனவே பிரமாண்ட வாடிவாசலை எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது..

வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது..

* `விஜய் 66′ படத்திற்கான முன்தயாரிப்புகளில் இருக்கும் விஜய், இப்போது நேரம் கிடைத்திருப்பதால் நீண்ட நாளாக சந்திக்காமல் இருந்த லயோலா கல்லூரி நண்பர்களைச் சந்திக்கிறார் விஜய். தினமும் பத்து பேரோடு அவரது கொட்டிவாக்கம் வீட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. அவருடைய பள்ளி நண்பர்கள் இதில் சேரவில்லை. தொழிலில் முடங்கி இருக்கும் நண்பர்களுக்கு செய்கிற பொருளாதார உதவியும் இதில் சேர்த்தியாம். அவருடைய கல்லூரி தோழர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஒரு வருஷத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சந்தித்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவும் எடுத்திருக்கிறார்கள்.

[ad_2]

Source link

cinema.vikatan.com

கோலிவுட் ஸ்பைடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here