Home தமிழ் News ஆட்டோமொபைல் சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை… அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்… வாகன ஓட்டிகளுக்கு செக்!

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை… அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்… வாகன ஓட்டிகளுக்கு செக்!

0
சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை… அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்… வாகன ஓட்டிகளுக்கு செக்!

[ad_1]

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டும் ஹெல்மெட் அணிந்தால் போதும் என பலர் நினைக்கின்றனர். எனவே பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பலர் ஹெல்மெட் அணிவதில்லை.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

இதன் காரணமாக சாலை விபத்துக்களில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சமீபத்தில் மிகவும் தீவிரமாக அமல்படுத்த தொடங்கினர்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

சென்னை மாநகரில் தற்போது இதற்காக சிறப்பு வாகன தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பதால், சென்னையில் ஹெல்மெட் விற்பனை உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

இந்த சூழலில் மும்பை மாநகர போக்குவரத்து காவல் துறையினரும் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி மும்பையிலும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதாவது இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவருடன், பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

ஒருவேளை பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் ஓட்டுனர் உரிமம் அதிரடியாக 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இந்த விதிமுறை அடுத்த 15 நாட்களில் அமலுக்கு கொண்டு வரப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

அரசாங்கம் சமீபத்தில் 1998 மோட்டார் வாகன சட்டத்தை அப்டேட் செய்தது. அதை தொடர்ந்தே மும்பை போக்குவரத்து காவல் துறையினர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். இந்த புதிய அப்டேட்டின்படி கீழ்கண்டவற்றுக்கு அபராதம் விதிக்க முடியும். இந்த புதிய அப்டேட்டின் கீழ், இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட அபராதம் விதிக்க முடியும்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதமா? என நீங்கள் நினைப்பது புரிகிறது. அதாவது இந்த விதிமுறையின்படி, ஹெல்மெட் அணிந்திருந்தாலும், கொக்கியை சரியாக மாட்டாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்க முடியும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தலையில் ஹெல்மெட் இருந்தாலும், அதனை சரியான முறையில் அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

அதேபோல் ஹெல்மெட் உண்மையான பிஐஎஸ் (BIS – Bureau of Indian Standards) தர நிலைகளுக்கு இணக்கமாக இல்லை என்றாலும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிக்னல்களில் சிகப்பு விளக்கு எரியும்போது அதனை கடந்து சென்றாலும், அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறை மீறலுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

ஹெல்மெட் அணிந்திருந்தாலும் கூட, சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது அதனை மீறி சென்றால், 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த விதிமுறைகள் மூலம், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

சென்னையில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக போக்குவரத்து காவல் துறையினர் சாலை விபத்துக்கள் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால், இரு சக்கர வாகனத்தை ஓட்டிய பலரும், பின்னால் அமர்ந்து பயணம் செய்த பலரும் அதிகளவில் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது.

சாட்டையை கையில் எடுக்கும் காவல் துறை... அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி உத்தரவுகள்... வாகன ஓட்டிகளுக்கு செக்!

அத்துடன் பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்தே சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. தற்போது சென்னை மாநகரில் இந்த விதிமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Note: Images used are for representational purpose only.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here