Home சினிமா செய்திகள் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சஞ்சய் சத்? – ‘விஜய் 67’ அப்டேட்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சஞ்சய் சத்? – ‘விஜய் 67’ அப்டேட்

0
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சஞ்சய் சத்? – ‘விஜய் 67’ அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’ படத்தில் சால்ட் அன் பெப்பர் லுக்கில் வலிமையான வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கைகோக்கிறார். நடிகர் விஜயும் தற்போது நடித்து வரும் 'வாரிசு' படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைகிறார். கேங்க்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோவும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் கைகோத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here