Home சினிமா செய்திகள் சினிமாவில் எனது முதல் ஆசிரியர் அவர்தான்.. சரோஜ்கான் மறைவுக்கு பிரபல ஹீரோ ஷாருக்கான் இரங்கல்! | Saroj Khan is My first genuine teacher in the film industry: Shah Rukh Khan

சினிமாவில் எனது முதல் ஆசிரியர் அவர்தான்.. சரோஜ்கான் மறைவுக்கு பிரபல ஹீரோ ஷாருக்கான் இரங்கல்! | Saroj Khan is My first genuine teacher in the film industry: Shah Rukh Khan

0

[ad_1]

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு சரோஜ் கானுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு அந்த தொற்று இல்லை என்பது உறுதியானது. பின்னர் அவர் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று அவர் மகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக, இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இதனால் பாலிவுட் சோகத்தில் மூழ்கியது. இந்தி சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சரோஜ்கான், பாலிவுட்டில் மாஸ்டர் ஜி என்று அழைக்கப்பட்டு வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பல முன்னணி நடிகர்களை ஆட வைத்தவர். சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

ரஜினியின் தாய் வீடு

ரஜினியின் தாய் வீடு

கடந்த ஆண்டு வெளியான கலங்க் மற்றும் கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா படம் வரை பல பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். தமிழில், ரஜினியின் தாய் வீடு, மணிரத்னத்தின் இருவர், சிருங்காரம் உள்ளிட்ட படங்களுக்கும் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். அவர் மறைவுக்கு அமிதாப் பச்சனில் இருந்து பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உண்மையான ஆசிரியர்

உண்மையான ஆசிரியர்

இந்நிலையில், நடிகர் ஷாருக் கானும் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சினிமாவில் என் முதல் உண்மையான ஆசிரியர் சரோஜ் கான். சினிமா நடனம் குறித்து அவர் எனக்கு பல மணி நேரம் கற்றுக்கொடுத்திருக்கிறார். நான் சந்தித்ததிலேயே மிகவும் அக்கறையுள்ள, அன்பான, உத்வேகம் அளிக்கும் ஆளுமை அவர். அல்லா உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிப்பாராக. என்னை கவனித்துக்கொண்டதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here