Home சினிமா செய்திகள் சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி மாற்றமா…. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Sivakarthikeyan’s Don release might get preponed

சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி மாற்றமா…. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Sivakarthikeyan’s Don release might get preponed

0
சிவகார்த்திகேயனின் டான் பட ரிலீஸ் தேதி மாற்றமா…. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Sivakarthikeyan’s Don release might get preponed

[ad_1]

ஆட்டம் போட வைத்த ஜலபுலஜங்

ஆட்டம் போட வைத்த ஜலபுலஜங்

சுமார் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ஜலபுல ஜங்கு பாடல் கடந்து ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு செம ஹிட்டானது. புரியாத வார்த்தைகளாக இருந்தாலும், அனிருத்தின் இசை, சிவகார்த்திகேயனின் அசத்தல் டான்ஸ் ஆகியன இந்த பாடலை செம ஹிட் ஆக்கியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், ராகேஷ் ஆகியோர் பாடல்கள் எழுதி உள்ளனர். இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளாக பே பாடல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

டான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜனவரியில் ஆர்ஆர்ஆர், வலிமை என வரிசையாக பல பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் டான் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்வதாக முதலில் முடிவு செய்யப்பட்டது.

 எத்தனை முறை தள்ளி வைப்பீங்க

எத்தனை முறை தள்ளி வைப்பீங்க

பிறகு சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 17 ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் 25 ம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்பட்டது. அதே நாளில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டதால், டான் படத்தின் ரிலீஸ் தேதியை மே 13 ம் தேதிக்கு மாற்றினார்கள்.

வெளியிட போறது இவங்க தானா

வெளியிட போறது இவங்க தானா

இதனால் ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றிருந்தது. சேட்டிலைட் உரிமத்தை முதலில் ஜீ தமிழ் வாங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது கலைஞர் டிவி வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளது.

என்னது மறுபடியும் தேதி மாற்றமா

என்னது மறுபடியும் தேதி மாற்றமா

லேட்டஸ்ட் தகவலாக டான் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை தள்ளி போகவில்லையாம். அதற்கு பதில் அறிவித்த தேதிக்கு முன்பாகவே படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்களாம். மே 13 ம் தேதிக்கு பதிலாக மே 5 ம் தேதி டான் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. என்ன காரணம் என்ன சொல்லாமல், மீண்டும் டான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here