Home தமிழ் News ஆட்டோமொபைல் சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்… விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்… விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

0
சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்… விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

[ad_1]

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

பஜாஜ் நிறுவனம் பல்சர் என்160 எடிசன் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனம் பற்றிய டீசர் படங்களை அது வெளியிட்டு வந்தநிலையில் நேற்றைய (ஜூன் 22) தினம் மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே சந்தையில் விற்பனையில் இருக்கும் பல்சர் என்250 மற்றும் பல்சர் எஃப்250 ஆகிய மோட்டார்சைக்கிள்களின் இளைய சகோதரனாக இது விற்பனையில் இருக்கும்.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

அதாவது, என் 250 மற்றும் எஃப் 250 ஆகிய மாடல்களைக் காட்டிலும் சற்று குறைவான விலை மற்றும் குறைவான சிசி திறன் கொண்ட எஞ்ஜின் ஆகியவற்றைக் கொண்ட தேர்வாக அது விற்பனைக்குக் கிடைக்கும். அதேநேரத்தில், ஸ்டைல் மற்றும் கண் கவர் தோற்றத்தில் என் 250 மற்றும் எஃப் 250 ஆகிய மாடல்களுக்கு இணையான தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப புதிய என்160 பைக்கில் எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி பகல்நேர மின் விளக்குகளுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த அம்சம் பைக்கின் முகப்பு பகுதிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தொடர்ந்து, பின் பக்கத்திற்கு அழகு சேர்க்கும் வகையில் இரு செங்குத்தான அமைப்புடைய எல்இடி லைட் டெயில் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பு அம்சங்களாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிறிய வின்ட்ஸ்கிரீன், ஒய் வடிவ அலாய் வீல்கள், ஸ்பிளிட் டைப் கிராப் ரெயில்கள், அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்டவை பல்சர் என்160 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பான ரைடை வழங்குவதற்காக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் (Anti-lock braking system) தேர்வை பஜாஜ் வழங்குகின்றது. இத்துடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தேர்விலும் இந்த பைக்கை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதுமாதிரியான சூப்பரான அம்சங்களுடனேயே புதிய பஜாஜ் பல்சர் என்160 தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

புதிய பல்சர் ரூ. 1,23 லட்சம் (சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தேர்வின் விலை இதுவாகும்) தொடங்கி ரூ. 1.28 லட்சம் (ட்யூவல் சேனல் ஏபிஎஸ் தேர்வின் விலை இது) வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவ்விரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். எஞ்ஜினைப் பொருத்தவரை இந்த பைக்கில் என்160 பைக்கில் 164.8 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 16 பிஎஸ் மற்றும் 14.65 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டார் 5 ஸ்பீடு கியர்பாகஸில் இயங்கும். இந்த பவரானது என்எஸ்160 மாடலைக் காட்டிலும் சற்று குறைவு என்பது கவனிக்கத்தகுந்தது. 1.2 எச்பி பவர் வரை குறைவு. அந்த பைக்கில் 160 சிசி, 4 வால்வு மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

புதிய என்160 பைக்கில் ரைடிங் அனுபவத்தை சுவாரஷ்யமானதாக்குவதற்காக பைக்கின் முன் பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒய் வடிவ அலாய் வீல் 17 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

பல்சர் என்160 பைக்கில் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ஏபிஎஸ் தொழில்நுட்பத்துடன் சேர்த்து இரு டிஸ்க் பிரேக் வசதியையும் பஜாஜ் நிறுவனம் இந்த பைக்கில் வழங்கியிருக்கின்றது. ஆனால், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வெர்ஷனில் சிறிய அளவுகள் கொண்ட டிஸ்க் பிரேக்குகளையும், இரட்டை சேனல் ஏபிஎஸ் வெர்ஷனில் சற்று பெரிய அளவுள்ள டிஸ்க் பிரேக்குகளையும் பஜாஜ் வழங்கியிருக்கின்றது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

அந்தவகையில், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வெர்ஷனின் முன் பக்க வீலில் 300 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின் பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வெர்ஷனின் முன்பக்கத்தில் 280 மிமீ அளவுள்ள டிஸ்க்கும், பின்பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சூப்பரான பாதுகாப்பு அம்சத்துடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்பவே புக் பண்ண ஆசப்படுவீங்க!

பஜாஜ் நிறுவனத்தின் இந்த புதுமுக தயாரிப்பு ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் யமஹா எஃப்இசட், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் சுஸுகி ஜிக்ஸெர் ஆகிய இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கர்ரிபியன் ப்ளூ, ரேசிங் ரெட், டெக்னோ கிரே மற்றும் ப்ரூக்ளின் பிளாக் ஷேட் ஆகிய நிற தேர்வுகளில் புதிய என்160 விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், ப்ரூக்ளின் பிளாக் ஷேட் சிறப்பு நிற தேர்வாக உள்ளது. இதனை ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வெர்ஷனில் மட்டும் வழங்க பஜாஜ் முடிவு செய்திருக்கின்றது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here