Home Sports விளையாட்டு செய்திகள் சென்னை ஓபன் டென்னிஸ் – 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று லிண்டா சாதனை!

சென்னை ஓபன் டென்னிஸ் – 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று லிண்டா சாதனை!

0
சென்னை ஓபன் டென்னிஸ் – 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்று லிண்டா சாதனை!

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12 ம் தேதி தொடங்கியது. டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இறுதி சுற்றில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மாக்டா லினெட் பலப்பரீட்சை நடத்தினர். 17 வயதேயான லிண்டா, மாக்டாவை 4-6, 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினர்.

Chennai Open: Linda Fruhvirtova wins Margaret Amritraj award for most  promising young player - Sportstar

இரட்டையர் பிரிவில் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (கனடா), லூயிசா ஸ்டேபானி ( பிரேசில்),கூட்டணி, ஆனா லின்கோவா( ரஷ்யா),நடிலா ஜலாமிட்ஸ்( ஜார்ஜியா) இணை மோதியது. இப்போட்டியில் 6-1,6-2 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி – லூயிசா ஸ்டேபானி கூட்டணி.

போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோக்கு 26 லட்சம் ரூபாயும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு 9 லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here