Home Sports விளையாட்டு செய்திகள் “ஜெயிக்கிறது இல்ல; எங்களைத் தேடி வர்ற அந்தப் பாசம்தான் மோட்டிவேஷன்!” – புறா பந்தயங்களின் கதை | thanjavur pigeon association members talks about their emotional bond with pigeons

“ஜெயிக்கிறது இல்ல; எங்களைத் தேடி வர்ற அந்தப் பாசம்தான் மோட்டிவேஷன்!” – புறா பந்தயங்களின் கதை | thanjavur pigeon association members talks about their emotional bond with pigeons

0
“ஜெயிக்கிறது இல்ல; எங்களைத் தேடி வர்ற அந்தப் பாசம்தான் மோட்டிவேஷன்!” – புறா பந்தயங்களின் கதை | thanjavur pigeon association members talks about their emotional bond with pigeons

[ad_1]

40 புறா வளர்க்க மாதம் ரூ. 4,000 வரை செலவாகும். ஒரு புறாவின் ஆயுள் காலம் குறைந்தது 15 வருடங்கள் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை உயிர் வாழும். ப்ளு கிராஸ், வனத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கியே புறா பந்தயங்கள் நடப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு பறக்கும் தன்மை கொண்டது புறா. பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவுக்கு குடலில் உள்ள பூச்சிகள் நீக்குவோம், ஆக்டிவாக இருக்க, பறக்க மாத்திரை உள்ளிட்ட பலவிதமான செயல்களைச் செய்வோம்.

இதற்கு முன் டெல்லியில் நடத்தப்பட்ட போட்டியில் 1,800 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்து புறா வெற்றி பெற்றிருப்பது இப்போது வரை ஆச்சர்யத்துடன் பேசப்பட்டு வருகிறது. எந்தத் திசையிலும் திறந்து விட்டாலும் வளர்த்தவனை தேடி அந்தப் புறா வந்து சேரும். அப்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடேதும் இருக்காது. அதற்காகத்தான் பல சிரமங்களைக் கடந்து புறாக்களை வளர்த்து வருகிறோம். புறா பந்தயத்தையும், அதை வளர்ப்பதையும் சிலர் ஏளனமாகப் பார்ப்பதும் இருந்து வருகிறது.

புறா சங்கத்தினர்

புறா சங்கத்தினர்

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்று புறா பந்தயமும் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்றுதான். அரசு இந்த விளையாட்டின் மீது தனி கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழகம் முழுவதும் உள்ள புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக முன் வைக்கிறோம். இதனால் புறாக்கள் காக்கப்படுவதுடன் பாரம்பர்யமான இந்தக் கலையும் காக்கப்படும். எங்கள் சங்கத்தின் சார்பாகப் பல்வேறு புறா பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

சிறு தவறு கூட நடப்பதற்கு வாய்ப்பளிக்காமல் போட்டிகளை நடத்தி வருகிறோம். பந்தயம் நடத்தப்படுவதன் மூலம் புறா ஆயுள் மட்டுமல்ல அதன் மீது நாங்கள் வைத்துள்ள அன்பும் பெருகும்; புறாக்களை வளர்ப்பவர்களும் அதிகரிப்பார்கள்” என அடுத்த போட்டிக்கு தன் புறாவை தயார் செய்யத் தொடங்கச் சென்றார்.

[ad_2]

Source link

sports.vikatan.com

கே.குணசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here