Home Sports விளையாட்டு செய்திகள் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வெளியேற்றம்

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வெளியேற்றம்

0
டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வெளியேற்றம்

சூப்பர் 12 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 பிரிவில் ஏற்கனவே நியூசிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற நிலையில், இரண்டாம் இடத்திற்கான போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடையே நிலவியது. இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 7 புள்ளிகள் பெற்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் குறைவாக இருந்தது. இதனால் இன்று நடைபெற இருந்த இலங்கை மற்றும் இங்கிலாந்து போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது.

இந்நிலையில் சிட்னி மைதானத்தில் நடைபெற்றப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து நிசாங்கா மற்றும் மெண்டிஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து நிசாங்கா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்களில் 141 ரன்களே எடுத்திருந்தது. இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.

image

இதனைத் தொடர்ந்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் அதன்பிறகு வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, அரையிறுதி வாய்ப்பை தவறவிடும் நிலைமை காணப்பட்டது. எனினும் இங்கிலாந்து அணி 19.4-வது ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து போராடி வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 28 ரன்களும் எடுத்திருந்தனர். இலங்கை சார்பில் லஹிரு குமாரா, ஹசரங்கா, தனஞ்செயா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 7 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்கிறது. குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் +2.113 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் +0.473 நெட் ரன் ரேட்டுடன் இருக்கிறது. 7 புள்ளிகள் இருந்தாலும், இங்கிலாந்தை விட நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால் -0.173, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு இழந்துள்ளது. மேலும் இலங்கை, அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளும் வெளியேறியுள்ளன.

நாளை குரூப் 2 பிரிவில் நடக்கும் 3 போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் குரூப் 2 பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 அணிகளுக்குமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் மிக கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here