Home சினிமா செய்திகள் டைரி விமர்சனம்: ஒன்பது ஜானரும் ஒன்றாய்க் காண… எப்படியிருக்கிறது அருள்நிதியின் அடுத்த த்ரில்லர்? | Arulnithi’s yet another thriller movie Diary Review

டைரி விமர்சனம்: ஒன்பது ஜானரும் ஒன்றாய்க் காண… எப்படியிருக்கிறது அருள்நிதியின் அடுத்த த்ரில்லர்? | Arulnithi’s yet another thriller movie Diary Review

0
டைரி விமர்சனம்: ஒன்பது ஜானரும் ஒன்றாய்க் காண… எப்படியிருக்கிறது அருள்நிதியின் அடுத்த த்ரில்லர்? | Arulnithi’s yet another thriller movie Diary Review

[ad_1]

படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென தனித்தனியாகப் பின்னணி கதைகளும் இருக்கின்றன. ஆனால், எழுத்தில் இருக்கும் அழுத்தம் காட்சி அமைப்புகளில் இல்லாததால், எந்தவித அதிர்வையும் அவை ஏற்படுத்தாமல் அப்படியே கடந்துவிடுகின்றன. சாம்ஸ் ஒரு சில காட்சிகளில் மட்டும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஷா ராவுக்கு அமைந்ததெல்லாமே உருவகேலி, இரட்டை அர்த்த வசனங்கள்தான். ஆனால், சிரிப்பு மட்டும் எங்குமே வரவில்லை. கிஷோருக்கும் செம்பிக்கும் டைட்டில் கார்டில் கௌரவ தோற்றம் எனப் போடுகிறார்கள். ஆனால், ஜெயப்பிரகாஷ், அஜய் ரத்னம் எனப் பல சீனியர்கள்கூட அப்படியான தோற்றத்தில்தான் வருகிறார்கள். இவர்களுக்கிடையே ரஞ்சனா நாச்சியாரின் வேடம் மட்டும் கொஞ்சம் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கிறது.

டைரி விமர்சனம் | Diary Review

டைரி விமர்சனம் | Diary Review

சில படங்கள் முதல் பாதி சோதித்து இரண்டாம் பாதி சீறிப் பாயும். சில படங்கள் முதல் பாதியில் அமர்க்களப்படுத்திவிட்டு, இரண்டாம் பாதியில் தூங்க வைத்துவிடும். ‘டைரி’ இதில் முதல் வகை. முதல் பாதியில் பேருந்து பயணிகள் என்கிற ரீதியில் எக்கச்சக்கச்சக்கமாய் கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள். இடைவேளை வரை அது தொடர்வது நம்மை ஒரு கட்டத்தில் சலிப்படைய வைத்துவிடுகிறது. ஹாரர், த்ரில்லர், ஃபேன்டஸி, ஆக்ஷன் என ஒரே படத்தில் ஓராயிரம் ஜானர்களைக் கலந்து கட்டி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன். அதனாலேயே படம் எந்த ஜானரை நோக்கிச் செல்கிறது என்பதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது.

[ad_2]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here