Home சினிமா செய்திகள் ‘டை ஹார்ட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவிலிருந்து விலக முடிவு…ஏன் என்னாச்சு? | Hollywood actor Bruce Willis is stepping away from his acting carrer

‘டை ஹார்ட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவிலிருந்து விலக முடிவு…ஏன் என்னாச்சு? | Hollywood actor Bruce Willis is stepping away from his acting carrer

0
‘டை ஹார்ட்’ புகழ் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவிலிருந்து விலக முடிவு…ஏன் என்னாச்சு? | Hollywood actor Bruce Willis is stepping away from his acting carrer

[ad_1]

bredcrumb

Hollywood

oi-Mohana Priya S

|

நியூயார்க் : பிரபல ஹாலிவுட் நடிகரும், ஆக்ஷன் ஹீரோவுமான ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

1980 களின் முற்பகுதியில் தனது திரையுலக பயணத்தை துவக்கியவர் ப்ரூஸ். The Verdict உள்ளிட்ட பல படங்களில் அவரின் நடிப்பு மறக்க முடியாதது. மிக அழுத்தமான ரோல்களை தேர்தெடுத்து நடிக்கக் கூடிய நடிகர்களில் ப்ரூசும் ஒருவர். 1988 ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Die Hard படத்திற்கு பிறகு இவரின் புகழ் எங்கோ போய் விட்டது. இவரது முதல் பெரிய வெற்றி படம் இதுவாகும்.

கிட்டதட்ட 40 ஆண்டுகளாக திரையுலகில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ள ப்ரூஸ், இரண்டு Emmy உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். இவர் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர்.

ஒருவழியா சூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்... கேக் வெட்டி கொண்டாட்டம்! ஒருவழியா சூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்… கேக் வெட்டி கொண்டாட்டம்!

ப்ரூஸ் வில்லிசுக்கு என்னாச்சு

ப்ரூஸ் வில்லிசுக்கு என்னாச்சு

ப்ரூஸ் வில்லிஸ், சமீபத்தில் Aphasia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர். இது தங்களுக்கு மிகவும் சவாலாக காலம் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Aphasia என்றால் என்ன

Aphasia என்றால் என்ன

Aphasia என்பது மூளையை பாதிக்கக் கூடிய ஒரு வகை நோயாகும். இந்த நோய் ஒருவரின் அறிவாற்றல் திறமை பாதிக்கக் கூடியதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவோ அல்லது மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் திறன் இருக்காது. பொதுவாக இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் எழுதுவது மற்றும் பேசும் திறனை இழக்க செய்யக் கூடியதாகும்.இதனால் பக்கவாதம் அல்லது தலையில் காயமடைந்தவர்களுக்கு திடீரென வரக் கூடியதாகும்.

மகளின் உருக்கமான பதிவு

மகளின் உருக்கமான பதிவு

ப்ரூசின் மகள் ருமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில், ப்ரூசின் அற்புதமான ஆதரவாளர்கள், ரசிகர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அவரது குடும்பத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது என்னவென்றால், சில உடல்நல பிரச்சனைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ ஆய்வு நடத்திய போது அவர் Aphasia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் தாக்கத்தால் அவரின் அறிவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இன் காரணமாக ப்ரூஸ் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு கேட்கும் குடும்பம்

ஆதரவு கேட்கும் குடும்பம்

மேலும், உங்களின் ஆதரவும் அன்பும் தொடர்ந்து ப்ரூசிற்கும், எங்கள் குடும்பத்திற்கும் தேவை. ரசிகர்களையும் எங்களின் குடும்பமாகவே நினைக்கிறோம். அவர் உங்களுக்கு எப்படி எங்களுக்கு தெரியும். நீங்கள் அவருக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்றும் தெரியும் எனறும் ப்ரூசின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

English summary

Hollywood action hero Bruce Willis decided to stepping away from acting carrer.He was recently diagnosed with aphasia. So he decided to retiting from his acting carrer due to his health condition.

Story first published: Thursday, March 31, 2022, 10:56 [IST]

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here