Home சினிமா செய்திகள் தலையை சாய்த்து.. அப்படி ஒரு பார்வை.. புன்னகையைப் பாருங்களேன்.. ஏங்க வைத்த தர்ஷனா! | Dharshana Ashokan looks so cute in this image

தலையை சாய்த்து.. அப்படி ஒரு பார்வை.. புன்னகையைப் பாருங்களேன்.. ஏங்க வைத்த தர்ஷனா! | Dharshana Ashokan looks so cute in this image

0
தலையை சாய்த்து.. அப்படி ஒரு பார்வை.. புன்னகையைப் பாருங்களேன்.. ஏங்க வைத்த தர்ஷனா! | Dharshana Ashokan looks so cute in this image

[ad_1]

இப்படிப் பார்த்தால் எப்படி

இப்படிப் பார்த்தால் எப்படி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலின் கதாநாயகி தர்ஷனா. இவர் தற்போது சீரியலை தாண்டியும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஏங்க வைக்கிறார். இப்படி பார்த்தால் எப்படி என ரசிகர்களும் கண் இமைக்க மறந்து இவருடைய போட்டோவை பார்த்த வண்ணமே இருக்கின்றனர். அதனால் தான் இவருக்கு ஹார்டின்களாக கமெண்ட் அனுப்பி வருகின்றனர்.

ரசிகர்களைக் கவர்ந்த பொன் வசந்தம்

ரசிகர்களைக் கவர்ந்த பொன் வசந்தம்

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நன்றாக கவர்ந்து விட்டது. இந்த சீரியலில் 40 வயது ஆணுக்கும் 20 வயது பெண்ணிற்கும் ஏற்படும் காதல், அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியதாக இருந்தாலும் இது தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .

தர்ஷனா

தர்ஷனா

இந்த சீரியலின் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் கதாநாயகியாக தர்ஷனாவும் கேரக்டராக வாழ்ந்துவருகின்றனர். அதனால்தான் இவர்கள் இருவருக்குமே இந்த சீரியல் ஒரு திருப்புமுனை தான். அதுபோல் தர்ஷனா வுக்கு இந்த சீரியல் தான் முதல் சீரியல் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் .அந்த அளவுக்கு சீரியலோட இவர் ஒன்றாகி விட்டார் .

மாடலாகவும் அசத்தல்

மாடலாகவும் அசத்தல்

அதனால் தான் இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் . இவர் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு மாடலாகவும் ஜொலித்து வருகிறார். அதனால் அடிக்கடி போட்டோசூட் எடுத்து வரும் இவர் தற்போது பாவாடை தாவணியில் ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார் .அதில் அப்படியே பக்கா கிராமத்து பெண்ணாக மாறி விட்டார்.

பல் டாக்டர்

பல் டாக்டர்

இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் ஒரு மருத்துவரும் கூட. அதுவும் பல் மருத்துவர் .வீட்டில் பெற்றோரின் ஆசைக்காக மருத்துவம் படித்துவிட்டு அவருடைய தந்தை இவருக்காக வைத்துக் கொடுத்த கிளினிக்கை பார்க்காமல் ,படிப்பு முடிகிற வரைக்கும் உங்களுடைய இஷ்டத்துக்கு இருந்தாச்சு. ஆனால் இனி என்னுடைய ஆசையை நான் நிறைவேற்ற வேண்டுமென நடிப்பில் காலடி எடுத்து வைத்து விட்டார் .

மாடலிங் போட்டோஷூட்

மாடலிங் போட்டோஷூட்

வீட்டிற்கு தெரியாமலேயே இவர் காலேஜ் படிக்கும்போது பல மாடலிங் போட்டோ ஷூட் களை எடுத்திருக்கிறாராம். ஆனால் அதுவெல்லாம் வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள இவர் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். தற்போது இவருக்கு இந்த சீரியலின் மூலமாக கிடைத்த ஆதரவை பார்த்ததும் அவருடைய பெற்றோரும் இவர் நடிப்பதற்கு சம்மதத்தை கொடுத்து விட்டனர்.

ஷூட்டிங்கில் பிசி

ஷூட்டிங்கில் பிசி

அதனால் இவர் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் கிடைக்கும் நேரங்களில் போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமிலும், டுவிட்டரிலும் போஸ்ட் போட மறப்பதில்லை .அந்த மாதிரி இவர் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது. பாவாடை தாவணியில் பக்கா கிராமத்து பெண்ணாக மாறி இருந்தாலும் இவருடைய அழகை ரசிக்கவா அல்லது அந்த கரு விழிகளில் தெரியும் காதலை ரசிக்கவா என ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

சைக்கிள் பயணம்

சைக்கிள் பயணம்

அதுவும் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு இவர் பவ்யமாக நடந்து செல்வதைப் பார்க்கும்போது சிலருக்கு என்னென்னமோ செய்கிறதாம் .இந்த மாதிரி ஒரு அடக்க ஒடுக்கமான பெண்ணை தான் தேடிக் கொண்டிருந்தோம் எனவும் நீங்கள் வேற லெவல் எனவும் கமெண்டுகளில் கொஞ்சி வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது.. சிரிப்பிலேயே அசரடிக்கிறார் தர்ஷனா.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here