Home சினிமா செய்திகள் தியேட்டர்.. ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸான படம் என்னென்ன?.. இன்னும் பாக்கலனா பாருங்க! | Movies released in theaters and OTT this week

தியேட்டர்.. ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸான படம் என்னென்ன?.. இன்னும் பாக்கலனா பாருங்க! | Movies released in theaters and OTT this week

0
தியேட்டர்.. ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸான படம் என்னென்ன?.. இன்னும் பாக்கலனா பாருங்க! | Movies released in theaters and OTT this week

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேலாகியும் வசூலை வாரிக்குவித்து இன்னும் திரையரங்கில் இப்படத்திற்கு கூட்டம் அலைமோதுகிறது. அதே நாளில் விக்ரம் வேதா இந்தி ரீமேக் வெளியானது.

காட்ஃபாதர்

காட்ஃபாதர்

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படம் காட்ஃபாதர். மலையாளத்தில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், சமூத்திரகனி, பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோர் 5ந் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.

பிஸ்தா

பிஸ்தா

ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சதீஷ் சிரிஷ், யோகி பாபு, சதீஸ் ஆகியோர் நடித்த பிஸ்தா படம் அக்டோபர் 7ந் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களிடமும் பிரபலமானார்

கார்த்திகேயா 2

கார்த்திகேயா 2

தெலுங்கு திரைப்படமான கார்த்திகேயா 2 ஏற்கனவே வெளிவந்து வெற்றிபெற்ற தெலுங்குப் படமான கார்த்திகேயா என்ற படத்தின் இரண்டாம் பாகம். ஒரு புராண த்ரில்லர். ZEE 5ல் ஒடிடி தளத்தில் அக்டோபர் 5ந் தேதி வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பார்க்கலாம்.

ஈஷோ மலையாளம்

ஈஷோ மலையாளம்

ஜெயசூர்யா மற்றும் நமீதா பிரமோத் நடிப்பில் நாதிர்ஷா இயக்கிய மலையாள த்ரில்லர் திரைப்படம் ஈஷோ நாட் ஃப்ரம் தி பைபிள். இத்திரைப்படர் அக்டோபர் 5ந் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளத. அருண் நாராயண் தயாரித்து சுனீஷ் வாரநாட் எழுதியுள்ளார். மலையாளத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரை தலைப்பாக வைத்திருப்பது பல விதமான சர்ச்சையை ஏற்படுத்தியது.

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

பாலிவிட் நடிகர் அமீர்கானின் திரை லால் சிங் சத்தா வாழ்க்கையில் இதுவரை இல்லாத தோல்வியை சந்தித்தது. இப்படம் ஆகஸ்ட் 11ந் தேதி திரையரங்கில் வெளியானது. தியேட்டரில் வெளியான 6 மாதம் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது முன்னதாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here