Home சினிமா செய்திகள் திருச்சி – ஊறும் வரலாறு – 29: கரகரப்பாய் ஒரு கலகக் குரல் – நடிகவேள் எம்.ஆர்.ராதா! | Trichy History: The life story and achievements of legendary M.R. Radha

திருச்சி – ஊறும் வரலாறு – 29: கரகரப்பாய் ஒரு கலகக் குரல் – நடிகவேள் எம்.ஆர்.ராதா! | Trichy History: The life story and achievements of legendary M.R. Radha

0
திருச்சி – ஊறும் வரலாறு – 29: கரகரப்பாய் ஒரு கலகக் குரல் – நடிகவேள் எம்.ஆர்.ராதா! | Trichy History: The life story and achievements of legendary M.R. Radha

[ad_1]

ராதாவால் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவர் அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு. எங்கும் அதிகநேரம் உட்கார்ந்தே பழக்கப்படாத ஜி.டி.நாயுடு 3 மணி நேரம் உட்கார இடமில்லாதபோதும் நாடக இசைக்குழுக்கான இடத்திலிருந்து நாடகத்தை ரசித்தார். தனது தொழிற்பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்காக ராதாவின் நாடகத்தை நாயுடு நடத்தினார். அந்த நாடகத்திற்குத் தலைமை ஏற்ற நோபல் விஞ்ஞானி சர் சி.வி.இராமன் பேசும்போது, “மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதாவின் நாடகங்களும் வேண்டும்” என்றார். இன்றைய காலநிலையை விளக்கிக் காட்டும் ராதாவுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறேன் என்றார் நாயுடு. இதன்பிறகு ராதாவுக்கும் அவரது தொழிலுக்கும் நாயுடு ஏராளமான உதவிகள் செய்தார்.

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் ‘ராதா மன்ற’த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், “எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்” என்ற பெரியார், ’ராதா வாழ்க’ என்று பேசி முடித்தார்.

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். “என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா” என்ற அந்தப் பெரிய நடிகரிடம் ராதா சொன்னார், “இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்” என்றாரே பார்க்கலாம். அந்தப் பெரிய நடிகருக்கு முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

[ad_2]

Source link

cinema.vikatan.com

கவிஞர் நந்தலாலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here