Home சினிமா செய்திகள் திரைத்துறைச் சிதறல்கள் | பாவனா மறு வருகை முதல் சமந்தா நன்கொடை வரை | Film Industry Dispersions | From Bhavana’s Return to Samantha’s Donation

திரைத்துறைச் சிதறல்கள் | பாவனா மறு வருகை முதல் சமந்தா நன்கொடை வரை | Film Industry Dispersions | From Bhavana’s Return to Samantha’s Donation

0
திரைத்துறைச் சிதறல்கள் | பாவனா மறு வருகை முதல் சமந்தா நன்கொடை வரை | Film Industry Dispersions | From Bhavana’s Return to Samantha’s Donation

> செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், 2 வேடங்களில் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படத்துக்குத் தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

> நடிகை பாவனா, 5 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

> ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்திப் படமான ‘குட்பை’ அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது. அடுத்து ‘மிஷன் மஜ்னு’ வெளியாக இருக்கிறது. ‘அனிமல்’ ஷூட்டிங் நடந்து வருகிறது. இதற்கிடையே அனுராக் பாசு இயக்கும் ‘ஆஷிகி 3’ என்ற இந்திப் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறாராம்.

> நடிகை சமந்தா, செகந்தராபாத்தில் உள்ள வேதபவனில் பெரிய ஹோமத்தை சமீபத்தில் நடத்தி இருக்கிறார். அங்குள்ள குருகுல ஆசிரமத்துக்கு நன்கொடையாகப் பெரும் பணத்தை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

> இனி யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‘‘ நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். உதவி கேட்பதற்காக பணக்காரர்களின் காலில் விழுவதை பார்த்திருக்கிறேன். உதவி பெற்ற பிறகு அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால், நான் தனிப்பட்ட முறையில் அதைப் பார்க்க விரும்பவில்லை.

என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, ​​அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இனிமேல் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here