Home Sports விளையாட்டு செய்திகள் தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை – பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்! | Thoothukudi Woman Murdered For Half Sovereign Jewelery Terror Staged in Broad Daylight

தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை – பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்! | Thoothukudi Woman Murdered For Half Sovereign Jewelery Terror Staged in Broad Daylight

0
தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை – பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்! | Thoothukudi Woman Murdered For Half Sovereign Jewelery Terror Staged in Broad Daylight

[ad_1]

தூத்துக்குடி மாவட்டம் ஆதிபராசக்தி நகரை சேர்ந்தவர் ராஜூ. அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி(62), கடந்த வியாழன் அன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

அப்போது, அடையாளம் தெரியாத 2 பேர் பட்டப்பகலில் வீடு புகுந்து பவானியின் கழுத்தை நெரித்தும், கட்டையால் தாக்கியும் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 4 கிராம் எடை கொண்ட தங்க கம்மலை கொள்ளையடித்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின்படி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொலை நடந்த சமயத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(25) மற்றும் சதீஷ் கண்ணன்(26) என்பது தெரியவந்தது. 

மேலும் படிக்க | நகைக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட மனைவிகள்!

Thoothukudi

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்  பாவனியின் வீட்டில் அதிக பணம் மற்றும் நகைகள் இருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றதாகவும், அவரை கொலை செய்த பின்னர் வீட்டில் உள்ள பீரோ மற்றும் பொருட்கள் வைத்திருக்கக் கூடிய இடத்தில் ஏதேனும் கிடைக்கும் என தேடியுள்ளனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் கொலையுண்ட பவானி அணிந்திருந்த 4 கிராம் எடையுள்ள தங்க கம்மலை பறித்துச்சென்றதது தெரியவந்தது. 

உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் திருடிச்சென்ற கம்மலையும், பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கொலை நடந்த ஒரு வாரத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும், தீவிர விசாரணை மேற்கொண்டும் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார். 

மேலும் படிக்க | பணத்திற்காக பாட்டியை கொன்ற பேரன்கள்: பீதியை கிளப்பும் Crime News

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

 



[ad_2]

Source link

zeenews.india.com

Zee News Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here