Home சினிமா செய்திகள் நடிகர் சிவாஜி வாரிசுகளிடையே சொத்து தகராறு.. விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்! | Actor Sivaji daughters filed a case against their brothers Prabhu and Ramkumar

நடிகர் சிவாஜி வாரிசுகளிடையே சொத்து தகராறு.. விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்! | Actor Sivaji daughters filed a case against their brothers Prabhu and Ramkumar

0
நடிகர் சிவாஜி வாரிசுகளிடையே சொத்து தகராறு.. விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்! | Actor Sivaji daughters filed a case against their brothers Prabhu and Ramkumar

சிவாஜி மகள்கள் வழக்கு

சிவாஜி மகள்கள் வழக்கு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாக கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சிவாஜி குடும்பத்திடம்

சிவாஜி குடும்பத்திடம்

இந்நிலையில் சாந்தி தியேட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான 13,500 பங்குகளில், 600க்கும் மேற்பட்ட பங்குகள், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் வசம் உள்ளது. இந்நிலையில், சாந்தி தியேட்டரை வாங்கிய அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனம், அங்கு வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டியுள்ளது.
சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்‌ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணை தள்ளி வைப்பு

விசாரணை தள்ளி வைப்பு

நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுத்ல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here