Home Sports விளையாட்டு செய்திகள் ‘நம்ப முடியவில்லை’ – வான்கடேவில் தோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்த கெவின் பீட்டர்சன் | it was unbelievable kevin pietersen amazed by witnessing welcome for Dhoni

‘நம்ப முடியவில்லை’ – வான்கடேவில் தோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்த கெவின் பீட்டர்சன் | it was unbelievable kevin pietersen amazed by witnessing welcome for Dhoni

0
‘நம்ப முடியவில்லை’ – வான்கடேவில் தோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்த கெவின் பீட்டர்சன் | it was unbelievable kevin pietersen amazed by witnessing welcome for Dhoni

[ad_1]

செய்திப்பிரிவு

Last Updated : 26 Apr, 2022 11:59 AM

Published : 26 Apr 2022 11:59 AM
Last Updated : 26 Apr 2022 11:59 AM

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்து போயுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்காக சென்னை அணி இறுதி வரை போராடி தோல்வியை தழுவியது. கடந்த போட்டியைப் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி வெற்றியை தேடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இறுதி ஓவரில் அவர் விளையாடினார். இருந்தும் வெற்றிக்கோட்டை அவரால் இந்த முறை கடக்க முடியவில்லை.

இந்நிலையில், இந்த போட்டியில் தோனிக்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பை கண்டு அதிர்ச்சியில் வியந்து போயுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். நடப்பு சீசனில் அவர் ஆங்கில மொழி வர்ணனையாளராக போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார்.

“நம்ப முடியாத வகையில் உள்ளது. அதனால் தான் இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. தோனி எனும் மனிதன் களத்திற்கு பேட் செய்யும் வரும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் சத்தம் கமெண்ட்ரி பாக்ஸ் வரை எதிரொலித்தது. அவருக்கும், சிஎஸ்கே அணிக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் கிடைக்கும் ஆதரவு அபாரமானது. போட்டியில் சென்னை தோல்வியை தழுவிய பிறகும் சத்தம் குறையவில்லை” என தெரிவித்துள்ளார் பீட்டர்சன்.

தவறவிடாதீர்!



[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here