Home சினிமா செய்திகள் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் ஆடு புலி ஆட்டம்… கலர்ஸ் தமிழ் ஸ்பெஷல் | Namma Madurai Sisters Program in Colors Tamil TV

‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் ஆடு புலி ஆட்டம்… கலர்ஸ் தமிழ் ஸ்பெஷல் | Namma Madurai Sisters Program in Colors Tamil TV

0
‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் ஆடு புலி ஆட்டம்… கலர்ஸ் தமிழ் ஸ்பெஷல் | Namma Madurai Sisters Program in Colors Tamil TV

[ad_1]

 பலகையின் இருபுறமும்

பலகையின் இருபுறமும்

‘பாசத்துக்கும் பகைக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம்’ என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார விளம்பரத்தில் ‘மதுரை சிஸ்டர்ஸ்’ என அழைக்கப்படும் இந்திராணி (சாயா சிங்), மேகலா (சுனிதா), புவனா (சங்கவி) அவர்களின் மாமாக்களுக்கு எதிராக பலகையின் இருபுறமும் இளைய சகோதரி காவ்யா (ஐரா அகர்வால்), கதாநாயகன் நந்தகுமார் (தீபக் குமார்) ஆகியோர் சிப்பாய்களாக உள்ளனர்.

 மதுரை பேருந்து நிலையங்களில்

மதுரை பேருந்து நிலையங்களில்

விளையாட்டில் உள்ள புலிகள் சக்தியைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் செம்மறி ஆடுகள் ஒற்றுமையை சித்தரிக்கின்றன, இது இந்நிகழ்ச்சியின் மையக் கோட்பாட்டைக் குறிக்கிறது, அங்கு மாமாக்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சகோதரிகளின் ஒற்றுமை காரணமாக அவர்கள் சகோதரிகளுக்கு இணையாக இல்லை. இந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மதுரையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்களில் இந்த விளையாட்டுக்கான காந்தப் பலகையை வைத்துள்ளது.

 #PasakaraPullainga #NMS என்ற ஹாஷ்டாக்

#PasakaraPullainga #NMS என்ற ஹாஷ்டாக்

மக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் போது விளையாட்டை அனுபவிக்க முடியும். இது விளையாட்டின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியுடன் அவர்களை இணைக்க உதவுகிறது. சமூக விலகலை கருத்தில் கொண்டு இந்த விளையாட்டிற்கான இருக்கைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை உற்சாகப்படுத்த பல தளங்களைப் பயன்படுத்துவதோடு, #PasakaraPullainga #NMS என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி இந்த தொலைக்காட்சி தனது சமூக ஊடகங்களில் இந்த பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தியுள்ளது.

 அப்பாவி பெண்ணிலிருந்து வலிமையான பெண்ணாக

அப்பாவி பெண்ணிலிருந்து வலிமையான பெண்ணாக

மதுரையின் அழகிய பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ”நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ கதையானது நான்கு சகோதரிகளின் வாழ்க்கையைச் சுற்றி பயணிக்கிறது. இந்தக் கதை அவர்களை மிகவும் சிறப்பாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன், நாடகம் மற்றும் காதல் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது தனது பெற்றோர் இறந்த பிறகு சிறு வயதிலேயே குடும்பக் கடமைகளை சுமந்து செயல்படும் இந்திராணியின் வாழ்க்கையை விவரிக்கிறது. இந்திராணி தனது பெற்றோரின் மரணத்திற்கு பழிவாங்கவும், தனது சகோதரிகளை பாதுகாக்கவும் ஒரு அப்பாவி பெண்ணிலிருந்து வலிமையான பெண்ணாக எப்படி பரிணமிக்கிறார் என்பது பற்றியும் மேலும் இக்கதை அவரது மூன்று தங்கைகளைச் சுற்றியும் வருகிறது.

தைரியம் மற்றும் அரவணைப்பு ஆகியவற்றின் மிகச்சரியான கலவையான நான்கு பெண்களின் எழுச்சியூட்டும் நிகழ்ச்சியைக் காண திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here