Home சினிமா செய்திகள் நயன்தாராவின் திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்…அடித்து சொல்லும் ஜோதிடர் | Astrologer predicts Nayanthara’s marriage life

நயன்தாராவின் திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்…அடித்து சொல்லும் ஜோதிடர் | Astrologer predicts Nayanthara’s marriage life

0
நயன்தாராவின் திருமண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்…அடித்து சொல்லும் ஜோதிடர் | Astrologer predicts Nayanthara’s marriage life

[ad_1]

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்

பல வருடங்களாக அனைவரும் கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் தான் தங்களின் திருமண தேதியை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி அறிவித்துள்ளது. ஜுன் 9 ம் தேதி திருப்பதியில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு சில கால பிரேக்கிற்கு பிறகு இருவரும் சினிமா வேலைகளில் மீண்டும் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்களின் ஜோதிடர்

பிரபலங்களின் ஜோதிடர்

இந்த சமயத்தில் நயன்தாரா மட்டுமல்ல அவரை போன்ற பல பிரபலங்களின் திருமண வாழ்க்கை, சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பது பற்றி பிரபல ஜோதிடர் வேணுசாமி கணித்து சொல்லி உள்ளார். பிரபலங்களின் ஜாதகங்களை கணித்து சொல்வதன் மூலம் திரையுலகிலும், பத்திரிக்கை உலகிலும் பிரபலமானவராக இருக்கக் கூடியவர் தான் வேணுசாமி.

இப்போ என்ன சொல்லி இருக்கார்

இப்போ என்ன சொல்லி இருக்கார்

இவர் லேட்டஸ்டாக நயன்தாரா, பாகுபலி நாயகி அனுஷ்கா ஷெட்டி, புஷ்பா ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, நடிகர் பிரபாஸின் திருமண வாழ்க்கை பற்றி கணித்து சொல்லி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. அவர் அப்படி என்ன கூறினால் என்றால், நயன்தாரா, அனுஷ்கா, ராஷ்மிகா ஆகியோரின் திருமண வாழ்க்கை வெற்றியானதாக இருக்காதாம்.

அச்சச்சோ என்ன சொல்றீங்க

அச்சச்சோ என்ன சொல்றீங்க

திருமணத்திற்கு பிறகு இந்த நடிகைகள் தங்களின் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்குமாம். அதனால் இவர்களின் திருமண வாழ்க்கை தோல்வியில் தான் முடியும். நீண்ட காலம் திருமண உறவு நீடிக்காதாம். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நயன்தாரா போடும் கன்டிஷன்

நயன்தாரா போடும் கன்டிஷன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, படங்களின் ப்ரொமோஷன்களில் பங்கேற்க மாட்டேன் என் கன்டிஷனோடு தான் ஒவ்வொரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் போட்டு வருகிறார். இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் பெரும் வரவேற்பு காரணமாக பல ஹீரோக்கள், பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்ளிட்டோர் நயன்தாராவையே தங்கள் படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவங்க வாழ்க்கை இப்படி தான்

இவங்க வாழ்க்கை இப்படி தான்

நயன்தாரா, ராஷ்மிகா, அனுஷ்கா ஆகியோரின் ஜாதகங்களில் குரு வலுவிழந்து காணப்படுகிறாராம். சமீபத்தில் விவாகரத்தான சமந்தாவின் ஜாதகத்திலும் குரு வலுவிழந்து தான் உள்ளாராம். இந்த நடிகைகள் மட்டுமல்ல நடிகர் பிரபாசுக்கும் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுமாம்.

அட என்னங்க சொல்றீங்க

அட என்னங்க சொல்றீங்க

அது மட்டுமல்ல 2024ம் ஆண்டிற்குள் நயன்தாரா, சமந்தா, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா ஆகியோரின் திரையுலக வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடுமாம். அடுத்த 2 ஆண்டுகளில் இவர்கள் சினிமாவை விட்டே காணாமல் போய் விடுவார்கள் என வேணுசாமி கணித்திருப்பது அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here